தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய ஓட்டுநர்: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

Road Accident: ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியை இயந்திரங்கள் கொண்டு வெட்டி லாரிக்குள் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 21, 2024, 02:01 PM IST
  • நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து.
  • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரிக்குள் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
  • படு காயங்களுடன் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதி.
தேசிய நெடுஞ்சாலை  விபத்தில் சிக்கிய ஓட்டுநர்: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர் title=

நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து பாலத்தில நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியை இயந்திரங்கள் கொண்டு வெட்டி லாரிக்குள் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே பழுதாகி நின்றது. இரவு நேரம் என்பதால் பழுதை சரி செய்ய ஆட்கள் கிடைக்காமல் நடு வழியில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் திருச்சியில் இருந்து மீன் பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டத்திற்கு வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி இருட்டில் நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது மோதியது. இதில் திருச்சியில் இருந்து வந்த லாரி முன்பகுதி முழுவதும் சேதமான நிலையில், ஓட்டுனரும் அதில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தார்.

மேலும் படிக்க | திமுக மக்களிடம் நம்பிக்கை இழந்து வருகிறது - அதிமுக வைகைச் செல்வன்!

இதனைத் தொடர்ந்து தாழையூத்து போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியிலிருந்து ஓட்டுநரை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். அது பலன் அளிக்காத நிலையில் கங்கைகொண்டான் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் லாரியை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வெட்டி அகற்றி சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

படு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டுனர் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று  பாதையில் அனுப்பப்பட்டன.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு இந்த தகுதி இல்லை - பாஜக எஸ்வி சேகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News