இனி மாஞ்சோலை மலைக்கு சுற்றுலா செல்லலாம்... கட்டுபாடுகளுடன் அனுமதித்த வனத்துறை!

Tirunelveli Manjolai Tourist Place: திருநெல்வேலியின் இயற்கை அழகு கொஞ்சும் மலைப் பிரதேசமான மாஞ்சோலைக்கு செல்ல சில கட்டுப்பாடுகளுடன் வனத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 16, 2024, 11:51 AM IST
  • இதற்கு முன் மிக கடுமையான கட்டுபாடுகள் இருந்தது.
  • திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ., தூரத்தில் உள்ளது.
  • காலை 8 மணி முதல் சென்று மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி.
இனி மாஞ்சோலை மலைக்கு சுற்றுலா செல்லலாம்... கட்டுபாடுகளுடன் அனுமதித்த வனத்துறை! title=

Tirunelveli Manjolai Tourist Place: தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு ஏற்படும் மலைப்பகுதிகளில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த மாஞ்சோலை. தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள இந்த மாஞ்சோலை, திருநெல்வேலியில் இருந்து சுமார் 57 கி.மீ., தொலைவில் உள்ளது. இயற்கை மாறா காடுகளை கொண்ட மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல கட்டுப்பாடுகள் இருந்தன. 

அந்த வகையில், அந்த கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல பிப். 16 (வெள்ளிக்கிழமை) முதல் சில நிபந்தனைகள் உடன் அனுமதிக்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. 

வனக்காப்பாளரிடமே நேரடி அனுமதி...

இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட அறிக்கையில், "துணை இயக்குநர் / வன உயிரின காப்பாளர், புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் அலுவலகத்தையோ அல்லது வனச்சரக அலுவலகத்தையோ அனுமதிக்காக அணுக வேண்டியதில்லை. மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று வனக்காப்பாளரிடமே அனுமதி பெற்று உடன் செல்லலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனுமதிக்காக பயணிகள் இனி அலைய வேண்டிய அவசியமில்லை. 

அதுமட்டுமின்றி, மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று அனுமதி பெறும்பட்சத்தில், செல்லும் வாகனத்தின் பதிவுச்சான்று நகல், வாகன காப்பீடு நகல், ஆதார் நகல் இவைகளை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்

4 சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதி

மேலும் அந்த அறிக்கையில், "நாள் ஒன்றுக்கு 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம், வேன், திறந்த வெளி வாகனம் போன்ற வாகனங்களின் பயணத்திற்கு அனுமதி இல்லை. முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் 10 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சாலைக்கேற்ப Ground Clearance வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பைக்கில் செல்ல நினைப்போருக்கு ஏமாற்றமளித்தாலும், அங்கு சென்று விதிகளுக்கு உட்பட்ட காரை வாடகைக்கு எடுத்து சுற்றுலா செல்லலாம்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "காலை 8 மணி முதல் சென்று மாலை 5 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் வனவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், காக்காச்சி புல் வெளிப்பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பயணத்தின் போது தடைச்செய்யப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பாலீதின் பைகள் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

அனுமதி கட்டணம்...

வாகனத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை பொருத்தே நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அனுமதி பெற்று நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் செல்ல வேண்டும். கடுமையான வானிலை நிகழ்வுகள், வனவிலங்குகளின் நடமாட்டங்கள் மற்றும் மோசமான சாலையின் நிலை பொருத்து சூழல் சுற்றுலா செல்ல தடைவிதிப்பதற்கு வனத்துறைக்கு முழு அதிகாரம் உண்டு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அண்ணாமலை தூத்துக்குடியில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைகாது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News