ஹர்திக் பாண்டியா 'டம்மி' கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2024, 11:00 AM IST
  • இதுகுறித்து அவர்கள் பல்வேறு வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
  • ரோஹித்தான் களத்தில் அனைத்து முக்கிய முடிவுகளையும் தற்போது எடுக்கப்பதாக கூறுகின்றனர்.
  • டாஸ் மற்றும் டிஆர்எஸ் ரிவ்யூ மட்டுமே ஹர்திக் பாண்டியா பார்க்கிறார் எனவும் கூறுகின்றனர்.
ஹர்திக் பாண்டியா 'டம்மி' கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன? title=

Mumbai Indians Latest News Updates: ஐபிஎல் தொடர் (Indian Premier League) தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். 2 அணிகளை தவிர அனைத்து அணிகளும் 7 லீக் ஆட்டங்களை விளையாடிவிட்டன. அதாவது, மொத்தம் 14 லீக் ஆட்டங்கள் உள்ள நிலையில், அதில் பாதி போட்டிகளை கடந்துவிட்டன. நடப்பு 17வது ஐபிஎல் தொடரும் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஒரு மாத காலத்தை நெருங்க உள்ளது. 

இன்னும் மே 26ஆம் தேதி வரை நடப்பு ஐபிஎல் தொடர் (IPL 2024) நடைபெற உள்ளது. இதுவரை நடந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி நான்காவது இடத்தில் இருந்தாலும் அந்த அணி இந்த முறை அசுர பலம் கொண்டு விளையாடி வருகிறது. சென்னை, லக்னோ அணிகளும் பிளே ஆப் ரேஸில் உள்ளனர். 

சர்ச்சையில் சுழலும் மும்பை இந்தியன்ஸ்

ஆனால், மறுபுறம் டெல்லி, மும்பை, குஜராத் ஆகிய அணிகள் ஏற்ற இறக்கத்தில்தான் உள்ளன. குறிப்பாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) இம்முறை பெரும் பலத்துடன் இருந்தாலும் அந்த அணியால் முழு திறனையும் கைப்பற்றி தொடர் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. மினி ஏலத்தையொட்டி குஜராத்திடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்தது; ரோஹித் சர்மாவை அதிரடியாக நீக்கிவிட்டு கேப்டன் பொறுப்பில் ஹர்திக் பாண்டியாவை அமர்த்தியது; எனவே பல விஷயங்கள் மும்பையையே சுற்றி வந்தது. 

மேலும் படிக்க | தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?

அழுத்தத்தில் ஹர்திக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya) நடப்பு தொடர் சிறப்பாக அமையவில்லை. மைதானத்தில் அவரின் வருகையின்போது, ரசிகர்கள் கடுமையாக அவரை எதிர்த்து கூச்சல் ஒலி எழுப்புகின்றனர். இது அவரின் ஆட்டத்தை கடுமையாக பாதித்ததாகவே தெரிகிறது. தொடரின் முதல் மூன்று போட்டிகளில் மும்பை அணி படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளில் வென்று அசத்தியது. ஆனாலும், சென்னை அணிக்கு எதிரான தோல்வி அந்த அணியை மீண்டும் சோர்வாக்கியது. கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியும் நூலிழையில்தான் மும்பை வசம் வந்தது. 

இப்படி தொடர் தொடங்கியதில் இருந்தே மும்பைக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் சரியான சூழல் அமையவே இல்லை எனலாம். அந்த அணி 7 லீக் ஆட்டங்களை விளையாடிவிட்டது. இன்னும் அந்த அணி ஹோம் மற்றும் அவே போட்டிகளுக்கு சரியான காம்பினேஷனை கண்டுபிடித்துவிட்டதா என்றால் பலரும் நோ என்றுதான் சொல்வார்கள். பிளே ஆப் போட்டிகளுக்கு மும்பை தகுதிபெற வேண்டும் என்றால் எதிர்வரும் போட்டிகளில் பெரிய நேட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிகளை குவிக்க வேண்டும். 

முக்கிய முடிவுகளை எடுக்கும் ரோஹித்

மும்பை அணிக்கு இத்தகைய அழுத்தம் உள்ள சூழலில் கேப்டன்ஸி ரோஹித்திற்கு மீண்டும் கைமாற்றப்படலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்தன. ஆனால் அவை உண்மையாக இருக்க வாய்ப்பிருக்காது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் களத்தில் ரோஹித் சர்மாதான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். குறிப்பாக, கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை பீல்டிங் செய்ததில் ரோஹித் சர்மா பெரும் பங்காற்றினார். 

பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை சொல்வது, பீல்டிங்கில் மாற்றம் ஏற்படுத்துவது, முக்கியமாக கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற 12 ரன்களே தேவைப்பட்ட சூழலில் ரோஹித் சர்மா அமைத்த பீல்டிங் மும்பைக்கு வெற்றியை தேடித்தந்ததாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். 
பந்துவீச்சாளர்களை ரோட்டேட் செய்வதையும் அணி நிர்வாகம் பார்த்துக்கொள்ளும் சூழலில், களத்தில் முக்கிய முடிவுகளை ரோஹித் சர்மாவே எடுத்து வருகிறார் என்பதால் அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக ரோஹித்தே செயல்படுகிறார் என ரசிகர்கள் கருதுகின்றனர். டாஸ், டிஆர்எஸ் ரிவ்யூ ஆகியவற்றுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த 'பலசாலி' பேட்டர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News