Rohit Sharma : இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன் - ரோகித்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாட இருக்கும் நிலையில், இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டேன் என ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 11, 2024, 10:00 AM IST
  • இனி மும்பை இந்தியன்ஸூக்காக விளையாடமாட்டேன்
  • ஓபனாக அபிஷேக் நாயரிடம் தெரிவித்த ரோகித் சர்மா
  • இருவரும் பேசிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல்
Rohit Sharma : இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன் - ரோகித் title=

ஐபிஎல் 2024 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இதற்காக இரு அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பிளேயரும், இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் அபிஷேக் நாயரை சந்தித்து ரோகித் சர்மா உரையாடினார். அப்போது இந்த சீசனுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மாட்டேன் என ஓபனாக பேசினார். அந்த வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில்  வெளியிட்ட நிலையில், சில மணி நேரங்களில் அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டது. 

ஆனால், சோஷியல் மீடியாவில் ரோகித் சர்மா அபிஷேக் நாயருடன் பேசும் வீடியோ வைரலாகிவிட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேறுவது இப்போது உறுயாகிவிட்டது. அபிஷேக் நாயருடன் ரோகித் பேசும்போது, " மும்பை இந்தியன்ஸ் சூழல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. எதுவும் சரியாக இல்லை. அதற்கு முழு காரணம் அவர்களே தான். நான் இந்த அணிக்கு வருவதை கோயில் போல் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லாம் மாற்றிவிட்டார்கள். இதுதான் என்னுடைய கடைசி சீசன்"  பேசியுள்ளார். இது அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல் என்றாலும், கொல்கத்தா அணியின் சோஷியல் மீடியா டீம் அதனை கவனிக்காமல் இணையத்தில் பதிவேற்றி பின்னர் நீக்கமும் செய்துவிட்டனர். 

மேலும் படிக்க | Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!

என்ன பிரச்சனை?

மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்ட நாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியாவை பெரும் தொகை கொடுத்து அணிக்கு அழைத்து வந்தது மும்பை இந்தியன்ஸ். அத்துடன் கேப்டனாக ரோகித் சர்மா தொடருவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு, வீரர்களுக்கான வர்த்தகம் முடிந்ததும் ஹர்திக் பாண்டியாவை மும்பைக்கு கேப்டனாக அறிவித்தனர். இது மும்பை அணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக காட்டினர். 

மும்பை அணியின் மோசமான ஆட்டம்

இது ஐபிஎல் 2024ல் வெளிப்படையாக தெரிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருப்பதுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News