ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான் - அது எப்படி?

RCB vs CSK Rain Chance: பெங்களூருவில் வரும் மே 18ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2024, 05:26 PM IST
  • இது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மழையால் ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளே வழங்கப்படும்.
  • இதனால், ஆர்சிபி தொடரில் இருந்து வெளியேறும்.
ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான் - அது எப்படி? title=

RCB vs CSK Rain Chance: இந்தியன் பிரீமியம்  லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் லீக் சுற்று போட்டிகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மட்டுமே 12 லீக் ஆட்டங்களை விளையாடி உள்ளன. மற்ற 6 அணிகளும் 13 லீக் போட்டிகளை விளையாடிவிட்டன.

இன்னும் 7 லீக் ஆட்டங்களே உள்ள நிலையில், பிளே ஆப் சுற்று குறிவைத்து அணிகளும் விளையாடி வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதிபெற்றுள்ளது. அதுவும் கொல்கத்தா அணி 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது எனலாம். 

பிளே ஆப் பந்தயம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெற்றியை பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்ற நிலையில் அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. தொடர்ந்து, சன்ரைசர்ஸ் அணி நான்காவது இடத்தில் இருந்தாலும் இரண்டு லீக் போட்டிகள் இருப்பதால் அந்த அணி குவாலிபயரில் இடம்பெற போகிறதா அல்லது எலிமினேட்டரில் இடம்பெற போகிறதா என்பதே கேள்வியாக உள்ளது. இருப்பினும், இந்த 3வது, 4வது இடங்களுக்கு மட்டும் 6 அணிகள் போட்டியிடுகின்றன எனலாம். இதில் சென்னை, டெல்லி, ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு தலா 1 போட்டிகளே உள்ளன. எனவே, அந்த போட்டிகளில் வென்ற ஆக வேண்டும் என முனைப்பில் உள்ளன. 

மேலும் படிக்க |ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?

குறிப்பாக சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆர்சிபி 12 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. நெட் ரன்ரேட்டில் இரண்டு அணிகளும் நல்ல நிலையில் இருந்தாலும் சிஎஸ்கே கூடுதல் சாதக்தோடு இருக்கிறது. ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை தனது கடைசி போட்டியில் மே 18ஆம் தேதி தனது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் நல்ல நெட் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை அடிப்படையாக வைத்தே பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும்.

ஆர்சிபி vs சிஎஸ்கே: மழை பெய்ய வாய்ப்பு

மாறாக சிஎஸ்கே அணிக்கு ஆர்சிபியை வென்றால் மட்டும் போதும் எனலாம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல் ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது எனலாம். ஆம், மே 18ஆம் தேதி ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியின் போது மழையால் போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போட்டி தினம் அன்று 74% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, போட்டி ரத்தானால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். இதனால் சிஎஸ்கே 15 புள்ளிகளையும், ஆர்சிபி 13 புள்ளிகளையும் பெறும். 

ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல்

இதில் ஆர்சிபியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு பறிபோகும் எனலாம். சிஎஸ்கே அணிக்கும் இது பிரச்னையை தரலாம். லக்னோ அணி அடுத்த இரண்டு போட்டியிலும் வென்றுவிட்டால் சிஎஸ்கேவுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் இருவருமே போட்டி மழையால் தடையாக கூடாது என வேண்டி வருகின்றனர். அதிலும் சிஎஸ்கே ரசிகர்கள் லக்னோ ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும் எனவும் வேண்டி வருகின்றனர். எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்சிபி - டெல்லி போட்டியின்போதும் மழை பெய்யும் என கூறப்பட்ட நிலையில், போட்டி எந்த தடையும் இன்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

லக்னோவா டெல்லி

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்று டெல்லியுடன் லக்னோ அணி மோதும் நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இரு அணியும் உள்ளன. டெல்லி அணிக்கு இதுதான் கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியில் வெல்வதன் மூலம் 14 போட்டியை பெறுவார்கள். எனவே டெல்லி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் சென்னை, லக்னோ அணிகள் தோற்க வேண்டும். ஆர்சிபி சிஎஸ்கே போட்டியில் வெற்றி பெற்றாலும் தன்னுடைய ரன்ரேட்டை விட குறைவாக பெற்றால் மட்டுமே டெல்லி தகுதிபெறும். எனவே, இன்றைய போட்டியில் டெல்லி அதிக நெட் ரன்ரேட்டுடன் வெற்றி பெற நினைக்கும்.

மேலும் படிக்க |ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News