மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்

Sukran Peyarchi Palangal: சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2024, 09:50 AM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • செல்வச் செழிப்பு அதிகமாகும்.
  • சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும்.
மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசியைத் தவிர கிரகங்களில் அவ்வப்போது நட்சத்திரங்கள், உதய, அஸ்தமான நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. இவற்றால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.

பணவரவு, ஐஸ்வர்யம், அன்பு, புத்திக்கூர்மை, பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் இரண்டு நாட்களில் அதாவது ஏப்ரல் 25 தேதி அதிகாலை மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாக உள்ள. சுமார் 25 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார்.  

ஏற்கனவே மேஷ ராசியில் சூரியனும் குருபகவானும் உள்ளனர். சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். வாழ்வில் சௌபாக்கியம் பெருகும். மகிழ்ச்சி பொங்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) 7பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். மேஷ ராசி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். செல்வச் செழிப்பு அதிகமாகும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணியிடத்திலும் வியாபாரத்திலும் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்!

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நல்ல பலன்களை கொண்டு வரும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள்

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமான பலன்களை அள்ளித் தரும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளை தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் அன்னை லட்சுமியின் அருள் கிடைப்பதால் பொருளாதார சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சி இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News