சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வெற்றி வாசல் தேடி வரும், பணத்திற்கு பஞ்சமிருக்காது

Sukran Peyarchi Palangal: மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2024, 12:21 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும்.
  • பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • புதிய வீடு, வாகனம் அல்லது பிற சொத்துக்களை வாங்க இது நல்ல நேரமாக இருக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வெற்றி வாசல் தேடி வரும், பணத்திற்கு பஞ்சமிருக்காது title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசி மாற்றங்கள் தவிர நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தம நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்களில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இதனால் சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

ஜோதிடத்தின் படி, சுக்கிரன், செல்வம், மகிமை, அதிர்ஷ்டம், செல்வம், வசீகரம், பேச்சாற்றல், புத்திக்கூர்மை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபமான இடத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித வெற்றிகளை காண்கிறார். சுக்கிரன் ஏப்ரல் 24 அன்று இரவு 11:44 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் பெருகும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் சாதகமான பலன்களை அடையவுள்ள ராசிகள்

மேஷம் (Aries)

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் பண வரவை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எங்கோ சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். இந்த காலத்தில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும். செல்வச் செழிப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்

ரிஷபம் (Taurus)

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக நிதி நிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இப்போது சுக்கிரன் அருளால் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில் விருத்தி அடையும். அதிகப்படியான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். 

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் அல்லது பிற சொத்துக்களை வாங்க இது நல்ல நேரமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம் (Libra)

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துலா ராசி மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்னும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், இந்த நேரத்தில் அதைத் திருப்பிச் செலுத்துவதில் வெற்றி பெறலாம்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News