Astro: புதன் அஸ்தமனம்... பார்த்து சூதானமா இருங்க மக்களே..!

Effects of Budh Asta: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலின் கிரகமான புதன் தற்போது மேஷ ராசியில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2024, 01:58 PM IST
  • ஜோதிடத்தில், புதன் ஞானத்தின் கடவுளாக கருதப்படுகிறார்.
  • புதனின் அருள் இருந்தால் தான், வாழ்க்கையில் முன்னேற முடியும்.
  • ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமிக்கிறார்.
Astro: புதன் அஸ்தமனம்... பார்த்து சூதானமா இருங்க மக்களே..! title=

Effects of Budh Asta: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலின் கிரகமான புதன் தற்போது மேஷ ராசியில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமித்துள்ளது. புதன் அஸ்தமனத்தினால், குறிப்பிட்ட சில வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். அவர்கள் வேலை மற்றும் தொழிலில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதகமானபலன்கள் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில், எந்த ஒரு கிரக நிலையிலும் ஏற்படும் மாற்றம் ஒருவருக்கு நல்ல பலன்கள் மற்றும் கெடு பலன்களை ஏற்படுத்தும். ஏனென்றால், கிரகங்கள் ராசிகளுடன் தொடர்புடையவை. கிரகங்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இதுவே காரணம். புத்தி கூர்மை மற்றும் அறிவாற்றலுக்கு காரணமான கிரகமான புதனின் அருள் இருந்தால் தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். புதன் ஏப்ரல் 4, 2024 முதல் புதன் மேஷ ராசியில் அஸ்தமித்துள்ள நிலையில், 12 ராசிகளில் சிலருக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கலாம்.

புதன் அஸ்தமனம் மற்றும் உதயம் 

ஜோதிடத்தின் படி, புதன் ஏப்ரல் 4, 2024 முதல் மேஷ ராசியில் அமைகிறது. மே மாதத்தின் முதல் நாளில் அதாவது 2024 மே 1 ஆம் தேதி புதன் உதயமாகும். இதற்குப் பிறகு, அஸ்தமனத்தினால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்களின் நிலை மாறலாம். தற்போது புதன் அமைவதால் 3 ராசிக்காரர்களுக்கு பாதகமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், புதன் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன் தருமா என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டி

மேஷ ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

தற்போது புதன் மேஷ ராசியில் அஸ்தமனம் ஆவதால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வரும் சில நாட்கள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் பிரச்சனைகளையும் சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் வேலையை விட்டு வெளியேற நினைத்தால், உங்கள் வேலையை மாற்ற இது சரியான நேரம் அல்ல. மே 1க்குப் பிறகு இதைப் பரிசீலிக்கலாம். முக்கிய வேலை எதையும் இப்போது தொடங்க வேண்டாம்.

கடக ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனம் ஆவது நல்லதல்ல. வரும் நாட்களில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றலாம். எந்த வேலை செய்யவும் மனம் வராது. உங்கள் வேலையும் ஆபத்தில் இருக்கலாம். எனவே, எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள்.வேலைப்பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்காது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காது.

கன்னி ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

கன்னி ராசிக்காரர்கள் காதல் மற்றும் தொழில் விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, புதிதாக எதையும் செய்ய நினைக்காமல் இருப்பது நல்லது. எந்த வேலையையும் முழு கவனத்துடன் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையை விட்டு விலக திட்டமிட்டால், சில நாட்கள் காத்திருக்கவும். வாழ்க்கையில் சோதனையான காலகட்டத்தை கொடுக்கும். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம். 

விருச்சிக ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

விருச்சிக ராசியினருக்கு புதனின் அஸ்தமனம் கெடு பலன்களை கொடுக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். முதலீடு செய்யும் முன் நன்றாக யோசித்து செய்யவும். மூத்த அதிகாரிகள் உடனான உறவு பாதிக்கப்படும். பணி அழுத்தம் காரணமாக, வேலையை விட்டு விடலாம் என்ற எண்ணம் கூட தோன்றும். எனினும் தன்னம்பிக்கை இழக்காமல், உங்கள் வேலையை தொடர்ந்து சிறப்பாக செய்யும் பட்சத்தில், விரைவில் அதற்கான பலன்கள் கிடைக்கும். 

மகர ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்

மகர ராசிக்கு புதனின் அஸ்தமனம் காரணமாக, வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு பெறுவது கடினமாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்காது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காது.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உச்சம் பெற்றார் சனி: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News