கோடை வெயிலை கூலா கழிக்க... ‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க, ‘அந்த’ உணவுகள் கண்டிப்பா வேண்டாம்

Summer Diet Tips: கோடை வெயில் அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் பல வித நடவடிக்கைகளை எடுக்கிறோம். 

 

Summer Diet Tips: கொளுத்தும் வெயிலில் நம் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைப்பது எப்படி? இதில் நாம் உட்கொள்ளும் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது. கோடையில் உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கக்கூடிய, குளிர்ச்சியான உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். கோடையில் எந்த உணவுகளை உண்ணலாம்? எவற்றை தவிர்க்க வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

பருவகால பழங்கள்: தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம், லிச்சி போன்ற கோடை கால பழங்கள் நீர்ச்சத்து நிறைந்தவை.  இவற்றை கண்டிப்பாக கோடையில் உட்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இது தவிர, இந்த பழங்களில் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவுகிறது.  

2 /9

இளநீர்: கோடையில் இளநீர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இது கோடையில் வியர்வை வடிவில் ஏற்படும் திரவ இழப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது மேலும் இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.  

3 /9

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் இயற்கையான குளிர்ச்சி மற்றும் நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயிலும் மிகக் குறைவான கலோரிகளே உள்ளன. இது உடல் உஷணத்தை சீராக்க உதவுகிறது.

4 /9

புதினா: கோடை காலத்தில் புதினா ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். புதினா உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கின்றது. செரிமானத்தை மேம்படுத்துவதில் புதினாவுக்கு நிகர் இல்லை. 

5 /9

மோர்: மோரில் இயற்கையாகவே உள்ள குளிர்ச்சித்தன்மை உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மோரில் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கோடை காலத்தில் மோர் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

6 /9

காரமான மற்றும் வறுத்த உணவுகள்: கோடை காலத்தில், உங்கள் உடல் ஜீரணிக்க அதிக ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடல் சூட்டை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது.  

7 /9

அதிகப்படியான காஃபின்: காஃபின் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடும். ஆகையால் கோடை காலத்தில் காபி அல்லது டீ அதிகம் குடிப்பதை தவிர்க்கவும்.

8 /9

சர்க்கரை: சர்க்கரை கலந்த குளிர் பானங்கள் கோடையில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு உடலில் நீரிழப்புக்கும் வழிவகுக்கும். ஆகையால் இவற்றை அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

9 /9

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.