Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

Viduthalai Part 2 : விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

Viduthalai Part 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் விடுதலை. கடந்த ஆண்டு வெளியான இப்படம், பலரின் மனதை பாதிக்கும் வகையிலான கதைக்களத்தை கொண்டிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

1 /7

சூரி, முதன் முதலாக கதாநாயகனாக நடித்திருந்த படம், விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரியுடன் சேர்ந்து பாவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

2 /7

விஜய் சேதுபதி, வாத்தியார் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கேரக்டரும் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. 

3 /7

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. 

4 /7

விடுதலை பாகம் இரண்டில், விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் கதை காண்பிக்கப்பட உள்ளது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

5 /7

இவர், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறாரா என்பது தெரியவில்லை. 

6 /7

எஸ்.ஜே.சூர்யா கைவசம் தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் உள்ளன. 

7 /7

இவரை, வெற்றி மாறனின் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.