தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடந்தால்... உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அந்த வகையில் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பது என்னென்ன நன்மைகளை தரும் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • May 11, 2024, 22:42 PM IST

10 ஆயிரம் ஸ்டெப் நடப்பது என்பது தனி நடைப்பயிற்சி என்றில்லாமல் உங்களின் அன்றாட பணிகளுக்கு இடையிலான ஸ்டெப்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 


 

 

1 /7

நீங்கள் தினமும் எத்தனை ஸ்டெப் நடக்குறீர்கள் என்பதை அறிய பல மொபைல் செயலிகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும், ஸ்மார்ட்வாட்ச் வைத்திருப்பவர்களுக்கும் அந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.   

2 /7

நீங்கள் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு அமைதியான மற்றும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இது உங்களின் தூக்கத்தை சீராக்கும்.   

3 /7

தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பதால் உடல் வலுவாகி, அதிக எனர்ஜியுடன் நீங்கள் செயல்படுவீர்கள். கடினமான வேலையையும் உங்களால் சோர்வின்றி செய்ய இயலும்.   

4 /7

தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பதால் உங்களின் இதயத்திற்கு நன்மையாகும். இதய நோயை தவிர்க்க உதவும். குறிப்பாக ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். 

5 /7

உடலுக்கு மட்டுமின்றி தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பது மன ரீதியாகவும் உங்களை வலுவாக்கும். உங்களின் மனநிலையை சீராக வைத்திருக்க அது உதவும்.   

6 /7

தினமும் 10 ஆயிரம் ஸ்டெப் நடப்பதன் மூலம் உடல் எடையும் குறையும். இதில் அதிக கலோரிகள் குறையும் மற்றும் வளர்ச்சிதை மாற்றமும் சீராகும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முறையான மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.