ஜிம், டயட் எதுவும் தேவையில்லை... 21 நாளில் பருமன் குறைய ‘இதை’ கடைபிடிங்க போதும்..!!

Weight Loss Tips: பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி, டயட் என தீவிரமாக முயற்சியை மேற்கொவார்கள். ஆனால், அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாமல், அதனை கைவிட்டு விடுவார்கள். இதன் காரணமாக, உடலில் முன்பை விட மிக வேகமாக கொழுப்பு சேரத் தொடங்கும்.

உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம். இதில், நீங்கள் உங்கள் உணவு பழக்கம், மற்றும் பிற பழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கொழுப்பைக் கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

1 /8

Weight Loss Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும்  உணவு பழக்கம் காரணமாக பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று உடல் பருமன்.  இதற்கு நீங்கள் ஜிம்-டயட் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். என்பது அல்ல. 21 நாட்களில் சில கிலோ எடையைக் குறைக்க அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை செய்தாலே போதும்.

2 /8

வீட்டு உணவு:  உடல் எடையை குறைக்க வீட்டு உணவு சிறந்த வழி என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் துரித உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள், இது தவிர, மைதா, சர்க்கரை மற்றும் வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். வீட்டு உணவில் பல வகையான ஊட்டசத்துக்களை கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

3 /8

பழங்கள்: பழங்களில் நார்ச்சத்து உள்ளது, அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வைட்டமின்கள் கிடைக்கும். காலை-மாலை சிற்றுண்டிகளில் பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பருவகால பழங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

4 /8

இரவு உணவு: பெரும்பாலானோருக்கு அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் நிலை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் இரவு உணவும் மிகவும் தாமதமாகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவு உணவின் நேரத்தை மாற்றவும். மாலை 6:30 முதல் 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

5 /8

வாக்கிங்: சாப்பிட்ட பிறகு உடனேயே படுக்கைக்கு செல்வதற்குப் பதிலாக, சிறிது நேரம் நடக்கவும். வெளியில் வாக்கிங் செல்ல பிடிக்கவில்லை என்றால், வீட்டிற்குள் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் சிறிது நேரம் நடக்கலாம்.

6 /8

எடை குறைக்கும் பானம்:  உடல் எடையை குறைக்க, எடை குறைக்கும் பானத்தை குடிக்கவும். அதில் இஞ்சி, சீரகம், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், செலரி சேர்த்து தண்ணீர் குடிக்கலாம். வேண்டுமானால் க்ரீன் டீயையும் அருந்தலாம். இந்த பானங்கள் அனைத்தும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இது உடல் எடையை குறைக்க உதவும்.

7 /8

நல்ல தூக்கம்: உடல் எடையை குறைக்க, போதுமான அளவு தூங்குவது அவசியம். தூக்கமின்மை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நல்ல தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் சீக்கிரமாக இரவு உணவு சாப்பிடுகிறீர்கள் என்றால், இரவு 10:30-11 மணிக்குள் தூங்க முயற்சி செய்யுங்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.