Covaxin கொரோனா தடுப்பூசி வைரஸை தடுத்தாலும் பக்கவிளைவுக்கும் பஞ்சமில்லை! அதிர்வூட்டும் ஆய்வு!

Covaxin Side Effects Revealed In Study: கோவாக்ஸின் உட்கொள்பவர்களில் 30% க்கும் அதிகமானோர் நரம்பு மண்டல கோளாறுகள், மாதவிடாய் அசாதாரணங்களை அனுபவித்ததாக ஆய்வு தெரிவிக்கிறது

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 

1 /7

2019ம் ஆண்டு உலகில் உருவாகி, கோர வடிவம் எடுத்து உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ், அதன் பக்கவிளைவுகளாக பல சேதங்களை ஏற்படுத்தி சென்றுவிட்டது.

2 /7

2020ஆம் ஆண்டில் உலகம் இதுவரை பார்த்திராத மாபெரும் சுகாதார பிரச்சனைகளை உருவாக்கியது கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட கோவிட் நோய்...

3 /7

வைரஸ் காற்றில் பரவுகிறது என்று புரளி காற்றுவாக்கில் பரவினாலும், கை கழுவி சுத்தமாக இருந்தால் பரவாது என்று கூறி உலகமே கொரோனாவை கை கழுவும் விஷயத்தை முன்னெடுத்தது

4 /7

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க, சமூக இடைவெளி என்ற விஷயம் நடைமுறைக்கு வந்தது

5 /7

கையைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றினாலும், முகக்கவசம் அணிந்தால், நுரையீரலை தாக்கும்  கொரோனா தொற்றாமல் தவிர்க்கலாம் என்பதால், முகக் கவசமும் கட்டாயமாக்கப்பட்டது

6 /7

நோய் பாதிப்பில் இருந்து தடுத்துக் கொள்ள கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் அருகிவிட்ட நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பான ஆய்வுகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன

7 /7

இந்தியாவில் 'கோவிஷீல்ட்' என வழங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியை AstraZeneca நிறுவனம் திரும்பப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு Covaxin தொடர்பாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு வெளிவந்துள்ளது.