Aishwarya Rai : கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழா புகைப்படங்கள்..

Aishwarya Rai In 2024 Cannes Film Festival  : பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் கையில் மாவுக்கட்டுடன் கலந்து கொண்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aishwarya Rai In 2024 Cannes Film Festival : பாலிவுட் திரையுலகில் மட்டுமன்றி தமிழ் திரையுலகிலும் கொடிக்கட்டி பறந்த நாயகி ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்ட இவர், ஒரு சில கதைகளில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரை கடைசியாக அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். இவரை அடுத்து எத்தனை உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இவரை இன்னும் பலர் ‘உலக அழகி ஐஸ்வர்யா ராய்’ என்று கூறி வருகின்றனர். இவர், பிரான்ஸில் வருடா வருடம் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், இவருக்கு ஏதோ விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கையில் மாவுக்கட்டுடன் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். 

1 /7

1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர், ஐஸ்வர்யா ராய். தமிழ் படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. 

2 /7

பிரான்ஸில், வருடா வருடம் பிரம்மாண்டமான அளவில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்வது வழக்கம். 

3 /7

இந்த வருடத்தின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து கிளம்பிய ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. அதில், அவருக்கு கையில் அடிப்பட்டிருந்து கட்டு போட்டிருந்தது தெரிந்தது. 

4 /7

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யாவுக்கு என்ன ஆச்சு என கவலைகொள்ள ஆரம்பித்தனர்.

5 /7

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் சிகப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார். கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து அசத்தினார். 

6 /7

வருடா வருடம், ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பள வரவேற்பில் தனது பிரத்யேக ஆடை தீம் மூலம் அனைவரையும் கவருவார். அந்த வகையில் இந்த வருடமும் Falguni Shane Peacock gown ஆடையை அணிந்து வந்திருக்கிறார். 

7 /7

தற்போது, ஐஸ்வர்யா ராயின் தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த விழாவில் அவர் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டிருக்கிறார்.