எகிறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் பழங்களின் தோல்கள்

High Uric Acid : இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சில பழங்களின் தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பழங்கள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்-

 

இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த நாம் நமது உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆனால், உடனடி தீர்வு பெற சில பழங்களின் தோல்கள் பயனுள்ளதாக இருக்கும். 

1 /6

வாழைப்பழத்தோல் தேநீர் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும். இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமில அளவை அதிகரிக்காமல் கட்டுபடுத்த உதவலாம். 

2 /6

ஆப்பிளை தோல் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவது பல நன்மைகளை செய்யும், மேஉமி இதில் இருக்கும் நார்ச்சத்து யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும். 

3 /6

பப்பாளி தோல் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும். அதேபோல் இந்த தோல் உடல் எடையையும்  குறைக்க உதவும்.

4 /6

அதிகப்படியான யூரிக் அமிலத்தை குறைக்க, மாதுளை பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்ளலாம். ஏனெனில் மாதுளை பழத்தோலில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், யூரிக் அமிலம் கட்டுபடுத்த உதவும்.

5 /6

ஆரஞ்சு பழத்தின் தோல் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும், இதில் வைட்டமின் சி, ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் தேங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை அகற்ற உதவும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.