தளபதி 68 படத்தில் இணைந்த புதிய நடிகை..! அட இவங்களா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 68’ படத்தில் நடிக்க இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.   

Written by - Yuvashree | Last Updated : Aug 25, 2023, 10:54 AM IST
  • தளபதி 68 படத்தின் பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன.
  • இதில் ஜெய், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்.
  • ஒரு புதிய நடிகையும் இதில் இணைந்துள்ளார்.
தளபதி 68 படத்தில் இணைந்த புதிய நடிகை..! அட இவங்களா?  title=

முதன் முறையாக வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் இணையும் படம், தளபதி 68. இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் 68வது படம்…

‘லியோ’ பட நாயகன் விஜய் அந்த படத்தை அடுத்து தனு 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். கோலிவுட்டின் ஜாலி இயக்குநர் என்று புகழப்படும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து முதன் முறையாக படத்தை இயக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ரிலீஸிற்கு பிறகு தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன. தளபதி 68 படத்திற்கான நடிகர்கள் தேர்வு கடந்த சில நாட்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்

இரண்டு நாயகிகள்…

நடிகர் விஜய், தளபதி 68 படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இளைஞராகவும் கொஞ்சம் வயது மூத்தவராகவும் விஜய் இரண்டு தோற்றத்தில் வருகிறாராம். இதில், இளைஞராக நடிக்கும் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. வயது மூத்த விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கடைசியாக ஜாே-விஜய் ஆகிய இருவரும் ‘திருமலை’ படத்தில் நடித்திருந்தனர். தற்போது இவர்கள் 20 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Thalapathy 68

ஜெய்-பிரபுதேவா..

நடன கலைஞரான பிரபு தேவா, இயக்குநர் மற்றும் நடிகர் என சில அவதாரங்களை அவ்வப்போது எடுத்து வருகிறார். இவர் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் பல படங்களுக்கு பிரபு தேவா நடன கலைஞராக இருந்துள்ளார். அவரை வைத்து ‘வில்லு’ படத்தையும் இயக்கியுள்ளார். 

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிகர் ஜெய்யும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் கடைசியாக ‘பகவதி’ படத்தில் நடித்திருந்தனர். இதில் நடிகர ஜெய் விஜய்யின் சகோரனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். வெங்கட் பிரபு ஜெய்யை வைத்து சென்னை 28 (இரண்டு பாகங்கள்), கோவா ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அபர்ணா தாஸ்..

‘டாடா’ படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா தாஸ். இவர், இதற்கு முன்னர் விஜய்யுடன் இணைந்து ‘பீஸ்ட்’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். தற்போது இவர்கள் தளபதி 68 படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர், இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அரசியல் திரில்லரா..? 

விஜய்யின் 68வது படம் குறித்த தகவல்களும் சினிமா வட்டாரங்களில் சழன்றடித்த வண்ணம் இருக்கின்றன. இப்படம் ஒரு வெறித்தனமான அரசியல் திரில்லர் என்றும், விஜய் இதுவரை செய்திராத பல விஷயங்களை இந்த படத்தில் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய், கூடிய விரைவில் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடைசியாக நடிக்கும் படம் ஒரு அரசியல் படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால், இவரது 68வது படம்தான் ஒருவேளை கடைசி படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது. 

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..? 

தளபதி 68 படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ பணிகள் விரைவில் லண்டனில் தொடங்க இருக்கிறதாம். விஜய் நடித்து முடித்துள்ள ‘லியோ’ படத்தின் ரிலீஸிற்கு பிறகு அக்டோபர் மாதத்தின் இறுதி தேதிகள் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தளபதி 68 படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மதிப்பை இழந்த தேசிய விருது? நல்ல தமிழ் படங்களை கண்டு கொள்ளாததால் ரசிகர்கள் ஆத்திரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News