நினைத்தேன் வந்தாய்: ஸ்லிப்பாகி விழ போன எழில்.. தாங்கி பிடித்த சுடர், ரொமான்ஸ் அள்ளுதே

aNinaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 17, 2024, 03:06 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • ஸ்லிப்பாகி விழ போன எழில்.
  • தாங்கி பிடித்த சுடர், ரொமான்ஸ் அள்ளுதே.
நினைத்தேன் வந்தாய்: ஸ்லிப்பாகி விழ போன எழில்.. தாங்கி பிடித்த சுடர், ரொமான்ஸ் அள்ளுதே title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காவியாவை தொடர்ந்து கவினுக்கு ஹோம் வொர்க் செய்து கொடுப்பதாக சொல்லி சுடர் மாத்திரையை கொடுத்து அனுப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்

அதாவது கவின் மாத்திரை கொண்டு வந்து கொடுக்க பின்னாடியே சுடர் ரூம்க்கு வர யாரோ என்னை யாருமே பார்த்துக்க மாட்டாங்கனு சொன்னாங்க, ஆனால் என் புள்ளைங்க என்னை பார்த்துக்கறாங்க என்று பேசி சுடரை வெறுப்பேற்றுகிறான். அதன் பிறகு அஞ்சலியிடம் உனக்கு சாக்லேட் தரேன் நான் சொல்றதை செய்யறீயா என்று கேட்க அவள் முடியாது நீ அப்பா ரூமுக்கு போக சொல்லுவ என்று மறுக்க சுடர் அவளிடம் கெஞ்சி சம்மதிக்க வைக்கிறாள். 

அதன் பிறகு அஞ்சலி எழில் ரூமுக்கு போய் எதையோ கொடுக்க அவன் எனக்காக நீங்க இதையெல்லாம் செய்வீங்க என்று சந்தோசத்தோடு கேட்க நாங்களா செய்யல சுடர் தான் செய்ய சொல்லி அனுப்பினா என்று நடந்த காவியா, கவினை கரெக்ட் செய்த விஷயத்தை சொல்ல எழில் டென்ஷன் ஆகிறான். செல்வி பால் கொண்டு வர நீயா கொண்டு வந்தியா என்று கேட்க இல்ல சுடர் தான் கொண்டு வந்தாங்க என்று சொன்னதும் கோபப்படுகிறான். 

அது முடிந்ததும் எழில் அவனாக எழுந்து கீழே வர ஸ்லிப்பாகி விழ போக சுடர் அவனை தாங்கி பிடிக்கிறாள். எழில் சுடரை எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறான். வேலு விஷயம் முன்னாடியே தெரிந்து இருந்தால் உங்ககிட்ட சொல்லி இருப்பேன், தெரிந்த உடனே தான் உங்களை காப்பாற்ற ஓடி வந்தேன் என்று சொல்ல எழில் நீ என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News