குழந்தைகளின் முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டாம்! உயிருக்கு ஆபத்து!

Vastu Tips: பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் சில பொருட்களை வைக்க கூடாது. அப்படி மறந்தும் வைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.  

Written by - RK Spark | Last Updated : May 14, 2024, 02:10 PM IST
  • கண்ணாடி பொருட்களை குழந்தைகள் முன் வைக்க வேண்டாம்.
  • உடைந்த பொம்மைகளை குழந்தைகள் முன் வைக்க வேண்டாம்.
  • இவை எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
குழந்தைகளின் முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டாம்! உயிருக்கு ஆபத்து! title=

Vastu Tips: புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வளர்ப்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் பல நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.  இந்து வேதத்தின்படி, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தையின் அருகில் சில பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது கெட்ட சகுனத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும்.

மேலும் படிக்க | புத-ஆதித்ய யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

உடைந்த பொம்மைகள்

குழந்தைகள் எப்போதும் பொம்மைகளை விரும்பி விளையாடுவார்கள். ஆனால் அதனை அடிக்கடி உடைந்து விடுகிறார்கள். இது போன்ற சமயத்தில் உடைந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு அருகில் வைக்க கூடாது. ஏனெனில் உடைந்த பொம்மைகள் எதிர்மறை ஆற்றலை பரப்புகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உடைந்த பொம்மைகள் இருந்தால் உடனடியாக தூக்கி போடுவது நல்லது.

கண்ணாடி

வீட்டில் கண்ணாடிகள் இருப்பது சகஜம் தான். குழந்தைகள் விளையாடும் இடத்திலோ, அவர்கள் கண்ணில் படும் வகையில் கண்ணாடிகளை வைக்க கூடாது. கண்ணாடிகள் குழந்தைகளின் உருவங்களையும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் உருவத்தின் பிரதிபலிப்பைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும். எனவே குழந்தைகளை கண்ணாடிக்கு அருகில் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.

முள் செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, முள் செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை கொண்டுள்ளன. தவறுதலாகக் கூட குழந்தைககளின் கைகளில் அவை கிடைக்கக் கூடாது. வாஸ்துவை தவிர, முட்கள் குழந்தைகளின் பிஞ்சு கைகளை கிழிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியோ முள் செடிகள் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்றுவது நல்லது.

கலைப்பொருட்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வன்முறை அல்லது தீய கருப்பொருள்களை சித்தரிக்கும் எதிர்மறை கலைப் பொருட்களை வீட்டில் வைக்க கூடாது. இது குழந்தைகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. எனவே அவர்களின் கண்ணில் படும் வகையில் இந்த பொருட்களை வைக்க கூடாது.

கனமான டேபிள்

குழந்தை விளையாடும் பகுதியில் கனமான டேபிள் அல்லது சேர் போன்ற பொருட்களை வைக்க கூடாது. இது அவர்களின் ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கலாம். இதனால் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படும். மேலும் அதில் இடித்து கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் குழந்தைகள் விளையாடும் இடத்திலோ அல்லது கைப்படும் இடத்திலோ இந்த பொருட்கள் இருக்கக்கூடாது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News