முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்

உலர்ந்த கூந்தலில் கற்றாழையை சரியாகப் பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். எனவே இந்த கற்றாழையை கூந்தலில் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2024, 06:57 PM IST
  • முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் முடி சேதத்தை குறைக்க உதவுகிறது.
  • கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இப்படி பயன்படுத்தலாம்.
  • ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும்.
முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும் title=

Hair Care Tips: கோடை காலம் என்றால், சூரிய ஒளியால் முடி உதிர்ந்து போவது சகஜம்தான். சுட்டெரிக்கும் சூரியன் முடியை வேர் முதல் நுனி வரை உலர வைக்கிறது. இதன் காரணமாக, முடி வரச்சியாகத் தோன்றுவது மட்டுமல்லாமல், கூந்தலை தொடும்போது கரடுமுரடானதாகத் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியும் சேதமடைந்து, அதன் பளபளப்பை இழக்கக்கூடும், இதற்கு கற்றாழையை சரியான முறையில் பயன்படுத்தலாம். இந்நிலையில் முடி அடர்த்தியாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் தோற்றமளிக்க கற்றாழையை முடியில் எவ்வாறு தடவ வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கற்றாழையை முடியில் எப்படி தடவுவது | How To Apply Aloe Vera On Hair:
கற்றாழை ஒரு மருத்துவ தாவரம் என்று அழைக்கப்படுகிறது. இது சரும மற்றும் கூந்தலுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பராமரிக்க பயன்படுகிறது. கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் நல்ல ஆதாரமாகவும் உள்ளது. இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், போதுமான நீரேற்றத்தை வழங்க உதவுகிறது, அதனுடன் இந்த கற்றாழை தலைமுடியில் இருந்து பொடுகு நீக்க உதவும். அதுமட்டுமின்றி முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் முடி சேதத்தை குறைக்க உதவுகிறது.

கற்றாழையை முடியில் தடவுவதற்கு எளிதான வழி, அதை அப்படியே தலையில் தடவுவதுதான். இதற்காக, கற்றாழை இலையிலிருந்து கூழ் வெட்டி எடுக்கவும். இதனை அரைத்து தலையில் வேர் முதல் முடியின் நுனி வரை தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பின் தலையை அலசவும். கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இப்படி பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..

கற்றாழை மற்றும் தயிர் - வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கவும், கூந்தலுக்கு உயிர் கொடுக்கவும், தயிர் மற்றும் கற்றாழையை ஒன்றாக கலந்து கூந்தலில் தடவலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கற்றாழை, 2 ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும்.

கற்றாழை மற்றும் முட்டை - இந்த ஹேர் மாஸ்க் முடி வளரவும் வலுவாகவும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் சேதமடைந்த முடியை சரிசெய்வதில் அற்புதமான விளைவைக் தரும். இதற்கு ஹேர் மாஸ்க் செய்ய, ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் ஒரு முட்டையை வைக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து பின் கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கிலிருந்து முடிக்கு அதிக புரதம் கிடைக்கிறது.

கற்றாழை மற்றும் தேன் - சேதமடைந்த முடியை சரிசெய்து அவற்றை வளர இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை தயார் செய்யவும். இதற்கு 3 ஸ்பூன் கற்றாழை, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் டிக்கஷன், பாதி பழுத்த வாழைப்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து பேஸ்ட் செய்யவும். இதனை முடியில் தடவி 25 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். முடி பளபளக்கத் தொடங்கும்.

மேலும் படிக்க | வாழ்க்கையில் வெற்றி பெற்ற நபர்கள் காலையில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News