CAA மூலம் 350 பேருக்கு குடியுரிமை... அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் ‘சில’ மாற்றங்கள்!

CAA அமலுக்கு வந்த பிறகு, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவது எளிதாகிவிட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 16, 2024, 01:42 PM IST
  • இந்தியக் குடியுரிமையைப் பெற்ற பிறகு அவர்களுக்கு என்ன மாற்றம் வரும்?
  • அகதிகளாக வாழ்ந்த மக்கள் இனி இந்திய குடிமக்களாக வாழ்வார்கள்.
  • இந்திய குடியுரிமை பெறுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
CAA மூலம் 350 பேருக்கு குடியுரிமை... அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் ‘சில’ மாற்றங்கள்! title=

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துகள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமண மற்றும் புத்த மதத்தினர் சிறுபான்மையினராக உள்ள நிலையில், அந்நாடுகளில் மத ரீதியாக பல துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பல காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தம் செய்யப்பட்டு, சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

CAA அமலுக்கு வந்த பிறகு, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவது எளிதாகிவிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி  அமலுக்கு வந்த நிலையில், இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, முதற்கட்டமாக சுமார் 300 பேருக்கு மத்திய அரசால் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியக் குடியுரிமையைப் பெற்ற பிறகு அவர்களுக்கு என்ன மாற்றம் வரும் என்பதைத் தெரிந்து கொள்வோம்?

குடியுரிமைச் சான்றிதழ் கிடைத்த பிறகு, இந்த மக்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. அவர்கள் இப்போது நிரந்தர அடையாளத்தைப் பெறுவார்கள் என்பது மிகப்பெரிய நன்மை. இதுவரை அகதிகளாக வாழ்ந்த மக்கள் இனி இந்திய குடிமக்களாக வாழ்வார்கள். இதன் மூலம், இந்தியக் குடிமகனுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் இப்போது அவர்களுக்கும் கிடைக்கும்.

மேலும் படிக்க | அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?

இந்திய குடியுரிமை பெறுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

1. வாக்களிக்க முடியும்: தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற பிறகு, இனி இவர்களும் வாக்களிக்கலாம்.

2. தேர்தலில் போட்டியிட முடியும்: இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தேவையான நிபந்தனைகளில் ஒன்று இந்திய குடியுரிமை. இந்தியாவில், இந்திய குடிமகனாக இருப்பவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.

3. அரசியலமைப்பு பதவியை ஏற்க முடியும்: புலம்பெயர்ந்தோ, அகதியோ அல்லது வெளிநாட்டு குடிமகனோ இந்தியாவில் அரசியலமைப்பு பதவியைப் பெற முடியாது. ஆனால் இந்திய குடியுரிமை பெற்ற பிறகு, இவர்கள் பதவி வகிக்கலாம்

4. அரசாங்கத் திட்டங்களின் பலன்கள்: இந்தியக் குடிமக்கள் மட்டுமே மாநில அல்லது மத்திய அரசால் நடத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும்.

5. அடிப்படை உரிமைகளின் பலன்: இந்திய அரசியலமைப்பின் கீழ் இந்திய குடிமக்களுக்கு சில அடிப்படை உரிமைகள் உள்ளன. இந்திய குடியுரிமை பெற்ற பிறகு, இனி இவர்களும் அடிப்படை உரிமைகளின் பலனைப் பெற முடியும்.

சில கட்டுப்பாடுகள் 

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்தியக் குடிமகன் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறலாம். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சில சிறப்பு நடைமுறைகள் உள்ளன. இதன்படி, ஒரு இந்திய குடிமகன் இந்த வடகிழக்கு மாநிலங்களில் நிலம் வாங்கவோ அல்லது நிரந்தரமாக குடியேறவோ முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் நிலம் வாங்கவும் விற்கவும் நிரந்தரமாக குடியேறவும் உள்ளூர் குடிமக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. 

மேலும் படிக்க | PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News