அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா

Lok Sabha Elections: அமேதியின்  ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2024, 03:21 PM IST
  • பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட பிரியங்கா
  • பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி மீது பிரியங்கா கண்டனம்.
  • வேலையில்லா திண்டாட்டம், வளர்ச்ச் பற்றி பேச்சே இல்லை: பிரியங்கா காட்டம்.
அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா title=

Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் நான்கு கட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது. உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும், இங்கு, பாஜக சார்பில் சிட்டிங் எம்பி ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மாவும் களத்தில் உள்ளனர். அமேதியில் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. 

பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட பிரியங்கா

அமேதியின்  ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.  ‘நான் சிறு வயதில் இங்கு வரும் போது, ​​இங்குள்ள நிலம் முழுவதும் வெள்ளையாக காட்சியளிக்கும். அது பற்றி என் தந்தையிடம் கேட்பேன். நிலத்தில் அதிக உப்பு இருப்பதாகவும், இது விளைச்சல் நிலம் அல்ல என்றும் அவர் கூறினார். இன்று நான் வரும்போது எங்கு பார்த்தாலும் பசுமையாக உள்ளது. இது தானாக நடந்ததல்ல, என் தந்தையின் செயல். இங்குள்ள தரிசு நிலங்கள் அனைத்தையும் வளமாக்கும் திட்டம் அவரால் வகுக்கப்பட்டது.’ என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

பேச்சில் மட்டும் பெண்களுக்கு அதிகாரம்

‘இங்குள்ள எம்.பி., சிலிண்டர் விலை ரூ.400 ஆனபோது, டெல்லியில் செய்தியாளர்களிடம் தான் அதற்காக போராட்டம் செய்யப்போவதாக கூறினார். ஆனால், இப்போது சிலிண்டர் விலை 1200 ஆனபோது அவர் அமைதியாகிவிட்டார்.’ என்று பிரியங்கா ஸ்மிருதி இரானியை தாக்கினார். ‘பெண்கள் அதிகாரம் பற்றி பேசுகிறார்கள். ஆனால், பெண்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். கொடுமை செய்தவன் பாதுகாக்கப்படுகிறான். உன்னாவில் ஒரு இளம் பெண் சித்திரவதை செய்யப்பட்டார், இவர்கள் சித்திரவதை செய்தவர்களைக் காப்பாற்றினார்கள். ஹத்ராஸிலும் இதேதான் நடந்தது, இரவில் அந்தப் பெண்ணின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. அவளுடைய பெற்றோரால் அவளைப் பார்க்கக்கூட முடியவில்லை. இதுதான் உங்கள் எம்பி உறுப்பினராக இருக்கும் மோடியின் அரசு’ என்று பிரியங்கா சரமாரியாக பாஜக அரசாங்கத்தை சாடினார்.

மேலும் படிக்க | மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சாபஹர் துறைமுக ஒப்பந்தம்...!

வேலையில்லா திண்டாட்டம், வளர்ச்ச் பற்றி பேச்சே இல்லை 

காங்கிரஸ் செய்த வளர்ச்சிப் பணிகளை பற்றி பேசிய பிரியங்கா, ‘இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கான எந்த திட்டமும் இல்லை, மையத்தில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசாங்கத்தின் எண்ணம் சரியாக இருந்தால், சட்டங்களும் சரியாக இருக்கும். என் தந்தையின் நோக்கம் சரியாக இருந்தது. இங்கு வந்து அன்புடன் உங்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டார். அப்போதுதான் முக்கிய வளர்ச்சிப் பணிகள் நடந்தன. லக்னோவை இணைக்கும் அனைத்து சாலைகளும் காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்டன. இன்று வேலையில்லாத் திண்டாட்டம், வளர்ச்சிப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசுவதில்லை.’ என்றார்.

‘ஸ்மிருதி இரானி மேடை ஏறி பேச ஆரம்பித்தாலே, எங்களையும் எங்கள் குடும்பத்தையும் திட்ட ஆரம்பித்து விடுகிறார். என் தந்தை ராஜீவ் ஜி போன்ற தியாகியை துரோகி என்கிறார். மோடி ஜி அவரையும் மிஞ்சி விடுகிறார். இங்கு பொதுமக்கள் கதறி அழுகின்றனர். ஆனால், பிரதமரோ பெரிய மேடைகளில் மட்டுமே காணப்படுகிறார். அவர் தனது ஆடைகளை ஜொலிக்க வைக்க என்ன பயன்படுத்துகிறார் என தெரியவில்லை. சகோதரிகளே, அதை அவர் நமக்கும் சொன்னால் நாமும் சற்று ஜொலிக்கலாம்’ என்று பிரியங்கா கூறினார். 

பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி மீது பிரியங்கா கண்டனம்

தன் தந்தையையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பேசிய பிரியங்கா காந்தி, ‘எனது தந்தை பிரச்சாரத்திற்கு வரும்போதெல்லாம் நான் அழுவேன். மக்கள் அவரது கைகளைப் பார்த்தால் அவற்றில் காயங்கள் தெரியும். அவர் சோர்வாக காணப்படுவார். ஆடைகள் அழுக்காக இருக்கும். பிரச்சாரத்திற்காக சுற்றித் திரிந்து இரவு நேரங்களில் காரிலேயே தூங்குவார். வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மீண்டும் 2 மணி நேரத்தில் கிளம்பி விடுவார். ஆனால், இன்று உங்கள் பிரதமர் எப்படி இருக்கிறார்!! குறைந்தபட்சம் மேடையில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களுக்கு வணக்கமாவது சொல்லுங்கள். எப்போதாவது வயலுக்கு சென்று வேலை எப்படி நடக்கிறது என கேட்டிருக்கிறீர்களா? சம்பாத்தியம் எப்படி நடக்கிறது என கேட்டிருக்கிறீர்களா? அனைவரும் வீண் பேச்சுதான் பேசுவார்கள். ஆனால். மக்களுக்கு தேவையானதை பேச மாட்டார்கள். உங்கள் எம்பி-க்கும் இவற்றை பற்றியெல்லாம் கவலை இல்லை.’ என கூறினார். 

மேலும் படிக்க | மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... 8 பேர் பலி - 59 பேர் காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News