கன்னாபின்னானு எடை ஏறுதா? காலை உணவில் இதை சாப்பிடுங்க... வேகமா குறக்கலாம்!!

Weight Loss Tips: காலை உணவில் உடலுக்கு ஊட்டம் அளித்து, வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருந்து, உடல் எடையையும் குறைக்கும் சில உணவுகளை உட்கொண்டால் உடல் பருமன் தானாக குறையும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 28, 2023, 11:40 AM IST
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், காலை உணவாக அவல் சாப்பிடலாம்.
  • இது உண்பதற்கு மிகவும் இலகுவானது.
  • ஜீரணிக்க எளிதானது.
கன்னாபின்னானு எடை ஏறுதா? காலை உணவில் இதை சாப்பிடுங்க... வேகமா குறக்கலாம்!! title=

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஜிம் செல்ல முடிந்தவர்கள் பல மணி நேரம் ஜிம்மில் செலவிடுகிறார்கள். சிலர் கடுமையான உணவு கடுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் பலருக்கு இவற்றால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை. உடல் எடையை குறைப்பதில் சில தவறான புரிதல்களும் உள்ளன. உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் காலை உணவைத் தவிர்ப்பதையும் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறான பழக்கமாகும். இது எடையை குறைப்பதற்கு பதிலாக எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். மேலும் இது பல உடல்நல குறைபாடுகளுக்கும் வழிவகுக்கலாம். 

காலை உணவில் உடலுக்கு ஊட்டம் அளித்து, வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருந்து, உடல் எடையையும் குறைக்கும் (Weight Loss) சில உணவுகளை உட்கொண்டால் உடல் பருமன் தானாக குறையும். உடலுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை அளித்து எடை இழக்கும் முயற்சியில் நமக்கு உதவும் சில சிறந்த காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்கும் 5 காலை உணவுகள் (Breakfast For Weight Loss)

அவல் 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், காலை உணவாக அவல் (Poha) சாப்பிடலாம். இது உண்பதற்கு மிகவும் இலகுவானது மற்றும் ஜீரணிக்க எளிதானது. அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க, அதிக காய்கறிகளை சேர்த்து அவல் உப்புமா செய்து உட்கொள்ளலாம். அல்லது பாலில் ஊற வைத்தும் இதை சாப்பிடலாம். அவல் சாப்பிடுவதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படும். 

பயத்தம்பருப்பு அடை 

ஊட்டச்சத்து நிறைந்த பயத்தம்பருப்பு அடை எடை இழப்புக்கு ஒரு சிறந்த காலை உணவு விருப்பமாகும். நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இதில் ஏராளமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க இரு பெரிதும் உதவுகிறது. இதை சாப்பிடுவதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். மேலும் இதை உட்கொள்வதால் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த அடை செய்யும்போது இதில் காய்கறிகள் சேர்த்தால் இதன் ஊட்டச்சத்து மதிப்பு இன்னும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை ஒரே வாரத்தில் சுலபமாக குறைக்க வழி! இந்த 6 இலைகள் இருக்க கவலை ஏன்?

முட்டை 

புரதச்சத்து நிறைந்த முட்டை (Eggs) உடல் எடையை குறைக்க உதவும். காலை உணவாக வேகவைத்த முட்டை, முட்டை சாண்ட்விச், ஆம்லெட் அல்லது புர்ஜி சாப்பிடலாம். காலை உணவாக முட்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உதவுவது மட்டுமின்றி உடலுக்கு ஆற்றலையும் அளிக்கும். 

ஓட்ஸ் 

ஓட்ஸில் (Oats) நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு பசியையும் கட்டுப்படுத்துகிறது. குறைந்த கொழுப்புள்ள பால், சில பழங்கள் மற்றும் விதைகளை சேர்த்து ஓட்ஸ் சாப்பிடலாம். இது தவிர, நீங்கள் விரும்பினால், ஓட்ஸில் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களையும் சேர்த்து கிச்சடி செய்தும் சாப்பிடலாம்.

இட்லி

உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்களுக்கு நமது பாரம்பரிய உணவான இட்லி (Idli) மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இது உண்பதற்கு மிகவும் இலகுவானது மற்றும் ஜீரணிக்க எளிதானது. இட்லியை ஆரோக்கியமாக்க, கேரட், குடைமிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை அதில் சேர்க்கலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு மட்டுமல்ல, கூந்தல் அழகுக்கும் முகப்பொலிவுக்கும் விளக்கெண்ணெய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News