சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை!

Banana Peel For Healthy Beauty: வாழைப்பழத்தின் தோலில் அதிகமான சத்துக்கள் உள்ளது. ஆனால், இது பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ பண்புகளின் உறைவிடம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 03:54 PM IST
  • வாழைப்பழத்தோலின் மருத்துவ குணங்கள்
  • செரிமானத்தை சீராக்கும் வாழைப்பழத் தோல்
  • அழகை மேம்படுத்தும் வாழைப்பழத் தோலின் மகிமை
சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை! title=

உடல் ஆரோக்கியத்திற்கு சைவ உணவு நல்லதா இல்லை அசைவ உணவா என்ற பட்டிமன்றம் பல காலமாக தொடர்ந்தாலும், பழங்கள் உண்பது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. பழங்கள் மற்றும் காய்கறிகள் மனித உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பழத்தைத் தவிர, பழத்தின் தோல்களிலும் அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது பழத்தை விட ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதற்கு உதாரணம் வாழைப்பழம். நிபுணர்களின் கூற்றுப்படி, வாழைப்பழத்தின் தோலில் அதிகமான சத்துக்கள் உள்ளது. ஆனால், இது பற்றி பலருக்கும் தெரிவதில்லை.  

வாழைப்பழத்தோலில் உள்ள சிறப்பு அம்சங்கள், இரத்த அணுக்களின் சிதைவைத் தடுத்து வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவுகிறது. இதைத் தவிர வேறு பல நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.
 
புற்றுநோய் தடுப்பு
வாழைப்பழத் தோலில் பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும் மற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தோலை அதிகம் உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரித்து, புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஜூஸ்கள் சூப்பர் டானிக்! சர்வதேச மருத்துவர்களின் பரிந்துரை

மனச்சோர்வு குறையும்
வைட்டமின் B6 மற்றும் உயர் டிரிப்டோபன் உள்ளடக்கம் கொண்ட வாழைப்பழத்தின் தோல், மனச்சோர்வு மற்றும் மனநிலைக் கோளாறுகளை மட்டுப்படுத்த உதவும்.

கொலஸ்ட்ரால் குறையும்
வாழைப்பழத்தோலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன, இந்த நார்ச்சத்துக்கள், கொலஸ்ட்ராலைக் குறைத்து, தமனிகளின் சுவர்களில் கொழுப்பு ஒட்டிக்கொள்ளாமல் தடுக்கின்றன. இதனால் இருதய நோய் அபாயம் குறைகிறது.

கண்களை பாதுகாக்கும் வாழைப்பழத் தோல்
வாழைப்பழத் தோல்களை உண்பது, கண்களுக்கு நல்லது என்றும், கண்புரை வாய்ப்பைக் குறைக்கின்றன என்றும் கூறப்படுகிறது. கண்களுக்கு கீழே வாழைப்பழத்தோலை கொண்டு சில நிமிடங்கள் மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழே இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல, இதனால் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறைந்து முகம் பொலிவடையும்.  

மேலும் படிக்க | கர்ப்பம் தரிக்க உதவும் யோகாசனங்கள்! இத்தனை இருக்கிறதா?

மலச்சிக்கலுக்கு மருந்தாகும் வாழைப்பழத் தோல்
வாழைப்பழத் தோலில் உள்ள அதிக நார்ச்சத்து உள்ளது, குடல் இயக்கத்தை சீர்படுத்துகிறது. இந்த தரமான நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அத்துடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பற்களை ப்ளீச் செய்யும்
வாழைப்பழத் தோலைக் கொண்டு அவ்வப்போது பற்களை மசாஜ் செய்தால், அதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்  பற்களை வெண்மையாக்கும்.

பருக்களைப் போக்கும் வாழைப்பழத் தோல்
முக அழகை கெடுக்கும் முகப்பருக்களால் தோற்றப்பொலிவு மங்கிப்போனால், வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து அதன் பிறகு கடலைமாவு கொண்டு அலம்பி விடுங்கள். ஒரு வாரத்தில் முகத்தில் வித்தியாசத்தைப் பார்க்கலாம். வாழைப்பழம், சருமத்தில் ஏற்படும் தொய்வைக் குறைக்க உதவுவம். மேலும் வாழைப்பழத் தோலில், பருக்கள் மற்றும் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த வாழைப்பழத் தோல், சருமத்தின் மென்மையை பராமரிக்கிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து தோற்றம் பொலிவடைகிறது. 

மேலும் படிக்க | உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News