உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம், வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்

Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 12, 2024, 04:34 PM IST
  • வேலையின் மூலம் நிதிப் பலன்களையும் பெற முடியும்.
  • பதவி உயர்வு கிடைக்கலாம், சம்பளமும் கூடலாம்.
  • மத அல்லது மங்கள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.
உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம், வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் title=

Guru Udhayam Peyarchi Palangal 2024: வேத ஜோதிடத்தின்படி, கிரங்கள் அவ்வப்போது அஸ்தமனம், உதயம் ஏற்படும். இதன் விளைவு மனித வாழ்க்கையிலும் பூமியிலும் தெரியும். அந்த வகையில் தேவர்களின் குருவான குரு வருகிற ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய 3 ராசிகள் உள்ளன. இந்த ராசிக்காரர்களுக்கு பணம், செல்வாக்கு கூடும். மேலும், இந்த ராசிக்காரர்கள் பதவி மற்றும் கௌரவத்தை அடைய முடியும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்...

ரிஷபம் (Taurus Zodiac Sign): குருவின் உதயம் (Guru Udhayam 2024) ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் வியாழன் உங்கள் ராசியில் தான் உதயமாகப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன் அதனால் பலன்களையும் பெறுவீர்கள். மேலும், இந்த நேரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் சம்பளம் தவிர, பல வருமான ஆதாரங்களும் உருவாக்கப்படும். உங்கள் இலக்கை அடைய நீங்கள் செய்யும் கடின உழைப்பினால் பல மடங்கு வெற்றி குவியும். இந்த நேரத்தில், புதிதாக திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இந்த நேரத்தில், கூட்டுத் தொழிலில் லாபம் பெறலாம்.

மேலும் படிக்க | Shani Retrograde Horoscope 2024: சனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் சாதகமாக இருக்கும். ஏனெனில் வியாழன் கிரகம் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஒன்பதாம் வீட்டில் உதமாகப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் இருப்பதன் மூலம், நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் மத அல்லது மங்கள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். இந்த நேரத்தில், போட்டி தேர்வில் பங்கேறக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

சிம்மம் (Leo Zodiac Sign): குருவின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம். அதே நேரத்தில், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம், சம்பளமும் கூடலாம். பணி மாற்றம் விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மேலும் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். இந்த நேரத்தில், வணிகர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். மேலும் வியாபாரம் விரிவடையும். நிதி நிலை வலுவாக இருப்பதுடன், வேலையின் மூலம் நிதிப் பலன்களையும் பெற முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sevvai Peyarchi Palangal: மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 1 முதல் இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அற்புதமான வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News