IPL 2020 finals: நடிகர் மோகன்லால் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க துபாய்க்கு சென்ற மர்மம் அவிழுமா?

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு ஐ.பி.எல் இறுதிப் போட்டி முடிந்துவிட்டது. மும்பை அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றிவிட்டது.  செப்டம்பர் முதல் அனைவரும் காத்திருந்த இறுதிப் போட்டியைக் காண துபாய்க்கு வந்திருந்தார் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மோகன்லால்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2020, 12:56 AM IST
IPL 2020 finals: நடிகர் மோகன்லால் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க துபாய்க்கு சென்ற மர்மம் அவிழுமா? title=

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு ஐ.பி.எல் இறுதிப் போட்டி முடிந்துவிட்டது. மும்பை அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றிவிட்டது.  செப்டம்பர் முதல் அனைவரும் காத்திருந்த இறுதிப் போட்டியைக் காண துபாய்க்கு வந்திருந்தார் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மோகன்லால்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியனாகிவிடுமா இல்லை, ஐந்தாவது வெற்றிக் கனியை பறித்து மகுடம் சூடிக் கொள்ளுமா என்று பார்க்க வந்தார் மோகன்லால்.

டெல்லி கேபிடல்ஸ் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது, ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கலாம் என்று பார்க்க வந்தார் என்றும் கூறப்படுகிரது. இந்த ஐபிஎல் போட்டியில் பல புதிய சாதனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் மோகன்லாலின் வருகையும் ஒன்று என்று சொல்லலாம்.

துபாயில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் நேரடியாக மைதானத்திற்கு வர பொதுமக்களுக்கு இல்லை என்ற நிலையில், ரசிகர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே நேரலையில் போட்டியை கண்டு களித்தனர். 

பிரபலங்களுக்கு இதில் இருந்து விலக்கு உண்டு. மோகன்லாலுடன் இருக்கும் சிலர் முகக்கவசம் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மோகன்லால் போட்டிக்கு முன்னதாகவே மைதானத்திற்கு வந்துவிட்டார். அதை ரசிகர்கள் வீடியோவில் பார்த்துவிட்டனர். 

உடனே, சிலர் அதை ட்விட்டரில் அம்பலப்படுத்திவிட, அனைவரும் மோகன்லாலும் கிரிக்கெட் ரசிகர் என்று சிலாகித்து அவரது வீடியோக்களின் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்து வைரலாக்கிவிட்டனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News