Weekly Horoscope: லட்சுமி நாராயண யோகத்தினால் இந்த வாரம் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... அதிர்ஷ்ட ராசிகள் எவை!

வார ராசிபலன்:  ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும்  இரண்டாம் வாரத்தில், சூரியம் மற்றும் குரு பகவான் இணைகிறார்கள். அதே சமயம் புதன், சுக்கிரன் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகமும் இந்த வாரம் உருவாகும். 

 

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ரிஷபம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு லாபம், சொத்து, குடும்ப மகிழ்ச்சி, முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

1 /7

தின பலன்களை போலவே, வார ராசி பலன்களும் கிரக நிலைகளை வைத்தே கணிக்கப்படுகின்றன. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில், சூரியன் குரு பகவான் இணைவு, புதன், சுக்கிரன் இணைவினால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் ஆகியவற்றினால் பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

2 /7

ரிஷபம்: வரும் வாரம் மற்ற நாட்களை விட சிறப்பாக இருக்கும். செல்வமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு பணம் மற்றும் மகிழ்ச்சி இரண்டும் கிடைக்கும். பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள். இருப்பினும், இந்த வாரம் நீங்கள் தொழில் தொடர்பான பயணம் செல்ல வேண்டியிருக்கும். இந்தப் பயணம் உங்களுக்கு விரும்பிய பலனையும் வெற்றியையும் தரும். வாரத்தின் நடுப்பகுதியில், சில ஆன்மீக அல்லது சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

3 /7

மிதுனம்: பதவி உயர்வு, கௌரவம்  வந்து சேரும். நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும். அதேநேரம், பணியில் இருப்பவர்களின் நிலுவையில் உள்ள பணிகளும் முடிக்கப்படும். விரும்பிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணம் மகிழ்ச்சிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். முந்தைய திட்டங்களில் செய்த முதலீட்டை விட அதிக லாபம் கிடைக்கும். குடும்பம் அல்லது காதல் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் தீரும். 

4 /7

சிம்மம்: இந்த வாரம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் வாரமாக இருக்கும். நல்ல செய்திகள் கிடைக்கலாம். அன்பானவரின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறலாம். வீட்டில் நிலவி வந்த தகராறு மூத்தவர்களின் உதவியால் தீரும். தொலைதூரப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

5 /7

விருச்சிகம்: பெரிய கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் நிதி நன்மைகள் உள்ளிட்ட பல நல்ல வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் வருமானம் கிடைக்கும். வணிக விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

6 /7

மகரம்: இந்த வாரம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். தொழிலதிபர்களும் இந்த வாரம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கூடுதல் பணிச்சுமை இருக்கும். எனினும் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.   

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லிய தன்மைக்கு நாங்கள் பொறுப்பு இல்லை. இந்தத் தகவல் ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.