மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்

Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD' (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 28, 2024, 09:28 AM IST
  • ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பிரபாஸ்.
  • பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
  • கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் title=

Kalki 2898 AD Movie New Release Date: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

கல்கி 2898 ஏடி திரைப்படம்:
ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடித்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம், கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) ஆகும். இந்த படத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கல்கி 2898 ஏடி படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது. இந்தப் படம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் ராணா, தீபிகா படுகோன், துல்கர் சல்மான், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன், கல்கி 2898 படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

மேலும் படிக்க | Ajith Kumar Birthday Billa Re Release: அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு:
இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமலஹாசன் நடித்துள்ள சூழலில் அவரது கேரக்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே கல்கி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள கேரக்டர்கள் குறித்த அப்டேட்டுகளை பட குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி:
இந்நிலையில் தற்போது கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி (Kalki 2898 AD Movie Release Date) குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சலார் படத்தை தொடர்ந்து இந்த படமும் பிரபாஸிற்கு மிகப்பெரும் வெற்றியை கொடுக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கல்கி 2898 ஏடி ஓடிடி:
இந்தப் படத்தின் இந்தி ஓடிடி உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமையை வாங்கியுள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் நிறுவனம் 150 கோடி ரூபாய்களுக்கு ஒடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Samuthirakani: சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News