ராமாயணம் விவகாரம்; யெச்சூரிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்...

ராமாயணம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு தொடர்ப்பட்டுள்ளது!

Last Updated : May 5, 2019, 01:06 PM IST
ராமாயணம் விவகாரம்; யெச்சூரிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்... title=

ராமாயணம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு தொடர்ப்பட்டுள்ளது!

ஹிந்துக்களின் இதிகாச நூல்களான ராமாயணம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது, ஹித்துவார் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் மகாபாரதமும், ராமாயணமும் வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். சீதாராம் யெச்சூரியின் இந்தக் கருத்துக்கு சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர் " ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த இரு நுால்களும் வன்முறையை போதிப்பதாகவும், அதில் போர் குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், அதை பின்பற்றும் ஹிந்துக்கள் எப்படி சமாதானத்தை விரும்புவர்" எனவும் கேள்வி எழுப்பினார்.

யெச்சூரியின் இக்கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக,  யோகா குரு பாபா ராம் தேவ் தலைமையில் சன்னியாசிகள் பலர் சேர்ந்து, யெச்சூரிக்கு எதிராக, ஹரித்துவாரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படை அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், எல்லையில் போராடும் ராணுவ வீரர்களின் செயல்கூட வன்முறை என்றுதான் யெச்சூரி கூறுவாரா என கேள்வி எழுப்பினார். மேலும் இதிகாசங்களை இழிவுபடுத்தும் சீதாராம் யெச்சூரி தனது பெயரில் உள்ள சீதாராமை நீக்க வேண்டும் என்றும், தனது பெயரை பாபர், அப்சல் கான், செங்கீஸ் கான் என மாற்றிக்கொள்ளலாம் எனவும் விமர்சித்துள்ளார். 

மேலும் ஹிந்துகளின் புனித நூலை விமர்சிக்கும் அவர், குரானையோ அல்லது பைபிலையோ விமர்சிப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News