மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

Mangoes Health Benefits : மாம்பழ சீசன் தொடங்கியதை அடுத்து, இந்த பழம் குறித்த தகவல்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், ஒரு சுவையான தகவல் குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 28, 2024, 12:59 PM IST
  • மாம்பழத்தால் ஏற்படும் நன்மைகள்
  • மாம்பழத்தை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  • அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா? title=

Mangoes Health Benefits : கோடை காலம் தொடங்கி விட்டாலே நம் மனம் யோசிக்கும் இரண்டே விஷயம், “அப்பப்பா என்னா வெயில்” என்பதும் “இன்னுமா மாம்பழ சீசன் ஆரம்பிக்கல..” என்பதும்தான். தமிழகத்தை பொறுத்தவரை, மாம்பழ பிரியர்கள் பலர் இருக்கின்றனர். முக்கனிகளுள் முதற் கனியாக வரும் மாம்பழம், வீட்டு விஷேஷங்கள் மட்டுமன்றி சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாகவும் இருக்கிறது. பலருக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் ஃபேவரட் ஆன பழமாக பலருக்கு இருக்கும். இனிப்பு, புளிப்பு சில நேரங்களில் துவர்ப்பு என எந்த சுவையில் இருந்தாலும் அதற்கான பிரியர்கள் நம்மை சுற்றி இருக்கின்றனர்.

மாம்பழம் மட்டுமல்ல, எந்த பழங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றை சுத்தமான நீரில் கழுவி விட்டு பின்னர் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், மாம்பழத்தை பொறுத்தவரை ஒரு சிலர் அதை நீரில் சில மணி நேரங்கள் ஊற வைத்த பின்னர் சாப்பிட வேண்டும் என கூறுகின்றனர். அது ஏன் தெரியுமா? 

மாம்பழத்தில் இருக்கும் நன்மைகள்:

மாம்பழத்தில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. வயது வித்தியாசம் இன்றி அனைவரலாலும் விரும்பப்படும் ஒரு பழம், மாம்பழம்தான். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளும் நிறைந்திருகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறாங்களை கொடுள்ளன.  கண் பார்வை திறனை அதிகரிக்க, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க என, பல்வேறு நன்மைகள் மாமபழத்தில் நிறைந்திருக்கின்றன. 

அது மட்டுமன்றி, பீட்டா கெரோட்டீன் சத்துகளும் உள்ளன. இவை, உடலில் இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்புகளை சரிப்படுத்த உதவும். இதனால், நுரையீரல், இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். இவை, மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் கே சத்தினால் நிகழ்கின்றன.

மேலும் படிக்க | Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?

மாம்பழத்தை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்?

பலர், மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவர். மாம்பழங்கள் கடையில் விற்கப்படுவதற்கு முன்பு சரியாக கழுவப்படாததால் இதை சிலர் செய்வர். அது மட்டுமன்றி, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில மருத்துவ நன்மைகள், மாம்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால்தான் கிடைக்கும் என சிலர் நம்புகின்றனர். ஆனால் இது குறித்து கூறும் மருத்துவர்கள், மாம்பழத்தை வழக்கம் போல கழுவி சாப்பிட்டாலும், அல்லது ஊற வைத்து சாப்பிட்டாலும் அதில் இருக்கும் நன்மைகள்தான் கிடைக்கும் என கூறுகின்றனர். 

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

சில மாமபழங்களின் தோல்கள் மிகவும் கடினமாக இருக்கும். அதை, இலகுப்படுத்துவதற்காக தண்ணீரில் சிலர் ஊற வைப்பர். மேலும், ஏற்ற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்தவும், நெடு நாட்கள் அழுகி போகாமல் இருக்கவும் சில செயல்முறைகள் ஈடுபடுத்தப்படும். இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை நீக்கவும், தண்ணீரில் மாம்பழத்தை ஊற வைக்கலாம். 

மேலும் படிக்க | சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News