மாஸ்கோவை நோக்கி வாக்னர் குழு... உள்நாட்டு நெருக்கடியில் ரஷ்யா - கையை பிசையும் புதின்!

Wagner Mercenary Group Attack: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் படை வீரர்கள் அடங்கிய வாக்னர் கூலிப்படை அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2023, 04:40 PM IST
  • 1,200 கி.மீ தூரத்திற்கு வாக்னர் குழுவின் ஆயுதமேந்திய கான்வாய் வருவதாக தகவல்.
  • மாஸ்கோ தலைநகரில் பயங்கர எதிர்ப்பு நடவடிக்கை ஆட்சியை ரஷ்யா பிரகடனப்படுத்தியுள்து.
  • ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரின் ராணுவ தலைமையகத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த வாக்னர் குழு
மாஸ்கோவை நோக்கி வாக்னர் குழு... உள்நாட்டு நெருக்கடியில் ரஷ்யா - கையை பிசையும் புதின்! title=

Wagner Mercenary Group Attack: சுமார் 25 ஆயிரம் வீரர்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்ததாக வாக்னர் குழுவின் தலைவர் கூறியதை அடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு, தற்போது மிகப்பெரிய உள்நாட்டு நெருக்கடியை அவர் எதிர்கொள்கிறார்.

1,200 தூர ஆயுதமேந்திய கான்வாய்

ரஷ்ய கூலிப்படையாமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின், இன்று மாஸ்கோவை நோக்கி 1,200 கி.மீ தூரத்திற்கு ஆயுதமேந்திய கான்வாய் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக அனுப்பியதாக தெரிவித்தார். ரஷ்ய அதிகாரிகள், உக்ரைன் எல்லையில் உள்ள ஐரோப்பிய ரஷ்யாவின் தெற்குப் பகுதியை மாஸ்கோவுடன் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் ஒரு ராணுவ கான்வாய் இருப்பதாகக் கூறியதுடன், குடியிருப்பாளர்கள் அதை தவிர்க்குமாறும் எச்சரித்தார்.

'உயிரைவிடவும் தயார்'

இதுகுறித்த ஒரு வீடியோவில், கூலிப்படை குழுவின் தலைவர் ப்ரிகோஜின், தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்குள் இருப்பதாகவும், தனது போராளிகள் நகரின் இராணுவ தளங்களை கட்டுப்படுத்துவதாகவும் அறிவித்தார். பிரிகோஜின் தனது படைகள் உக்ரேனிய முன்னணியில் இருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார், அவரும் அவரது ஆயிரக்கணக்கான போராளிகளும் "உயிரைவிடவும் தயார்" என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.

மேலும் படிக்க | Study: ஆண்குறிக்கும் மூக்கு மற்றும் பாதத்திற்கும் என்ன தொடர்பு? அளவு தான்

'இது தேசத்துரோகம்' - புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படையினரின் நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கு மிகக்கொடிய அச்சுறுத்தல் மற்றும் தேசத்துரோகம் ஆகும் என்று கூறினார். பிஜோகின்ஸ் கிளர்ச்சி சகோதரர் சண்டையிடுவது போன்றது என்றும், துரோகிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் புதின் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை

மாஸ்கோ மற்றும் மாஸ்கோவின் சுற்றுவட்டாரப் பிராந்தியங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆட்சியை ரஷ்யா அறிவித்துள்ளது. "மாஸ்கோ நகரம் மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தின் பிரதேசத்தில் சாத்தியமான பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் நோக்கத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது என நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. 

கொளுத்திப்போடும் உக்ரைன்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர், ரஷ்ய கூலிப்படைத் தலைவரின் நடவடிக்கைகளை "(ரஷ்ய) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" என்று விவரித்தார். மேலும் "ரஷ்யாவில் அனைத்தும் தொடங்கிவிட்டது. மேட்டுக்குடியினருக்கு இடையேயான பிளவு மிகவும் வெளிப்படையானது. எதிர்ப்பை ஒப்புக்கொள்வது மற்றும் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டதாக பாசாங்கு செய்வது வேலை செய்யாது" என்று ஜெலென்ஸ்கியின் உதவியாளர் மைக்கைலோ பொடோலியாக் ட்வீட் செய்துள்ளார்.

பல மாதங்களாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்பாட்டில் இருந்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோஜின், ரஷ்யா இன்று தனது படைகளை கொடிய ஏவுகணை தாக்குதல்களால் குறிவைத்ததாக குற்றஞ்சாட்டினார். மேலும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

நாட்டின் ராணுவத் தலைமையை எதிரான கிளர்ந்துள்ள இந்த கூலிப்படை, ராணுவ தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் சபதமேற்றுள்ளார். மேலும் அவரது படைகள் தங்கள் வழியில் "எல்லாவற்றையும் அழித்துவிடும்" என்று கூறினார். ஏறக்குறைய 25,000 கூலிப்படையுடன், ரோஸ்டோவில் உள்ள இராணுவத் தலைமையகத்தை வாக்னர் குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இப்போது மாஸ்கோவிற்கு அணிவகுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News