கடும் வெப்பத்தினால் 100 பேர் மரணம்... பால் விலையை மிஞ்சிய ஐஸ் விலை..!!

Mali Heatwave: இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது. சாதனை அளவை எட்டியுள்ள வெப்ப அலை காரணமாக, மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 3, 2024, 04:29 PM IST
  • ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது.
  • தற்போது மாலியில் அதிகபட்ச வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
  • மின்வெட்டு காரணமாக மக்கள் அவதி.
கடும் வெப்பத்தினால் 100 பேர் மரணம்... பால் விலையை மிஞ்சிய ஐஸ் விலை..!! title=

Mali Heatwave: இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது. சாதனை அளவை எட்டியுள்ள வெப்ப அலை காரணமாக, மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில், ரொட்டி மற்றும் பாலை விட ஐஸ் கட்டிகளின் விலை இப்போது அதிகமாக உள்ளது.

மாலியில் கடும் வெப்பாலையின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், ஐஸ் கட்டி வாங்குவதற்காக மக்கள் கடைகளில் சண்டையிடுவதை காணும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. வரலாறு காணாத வெப்பம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்ற காரணங்களால் மக்கள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தலைநகர் பமாகோவில் நீடித்த மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காததால், வெப்ப அலையின் போது உணவைப் பாதுகாக்கவும், குளிர்ச்சியாக இருக்கவும் மக்கள் ஐஸ் கட்டிகளை வாங்குகின்றனர். தற்போது மாலியில் அதிகபட்ச வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (Heatwave) எட்டியுள்ளது.

உச்சம் தொட்ட ஐஸ் கட்டி விலை

ஐஸ் கட்டிகள் வாங்கி வந்து, அதன் மூலம் தான் தினசரி உபயோகப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க முடிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். இது ஓரளவிற்கு தான் பயன் தருகிறது என்றாலும், இதனை தவிர்க்க முடியவில்லை. ஆனால் உயரும் ஐஸ் விலைகள் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளன. சில இடங்களில் ஒரு சிறிய பைக்கு 100 பிராங்க் CFA (இந்திய ரூபாயில் 13.6 ரூபாய்) செலுத்த வேண்டும். சில இடங்களில் ரூ.40 முதல் ரூ.50 வரை கிடைக்கிறது. இதனால் ரொட்டியை விட ஐஸ் விலை அதிகரித்து வருகிறது. மாலியில் ஒரு பேக்கெட் ரொட்டியின் விலை சுமார் 250 CFA (34 ரூபாய்).

மின்வெட்டு காரணமாக மக்கள் அவதி

கடுமையான வெப்பம் மற்றும் மின்வெட்டு ஆகியவை மாலியில் பெண்களுக்கு அதிக துயரத்தை உருவாக்குகின்றன. சமைத்த உணவு சில மணி நேரத்திலேயெ கெட்டு விடுவதால் பெண்கள் அவ்வப்போது சமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மின்வெட்டால் உணவுப் பொருட்களை பிரிட்ஜிலும் வைக்க முடிவதில்லை. சீக்கிரம் கெட்டுவிடுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் பல நேரங்களில் உணவுகள் கெட்டுப் போய் தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், கடுமையான வெப்பம் அவர்களின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உணவு சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | வெப்பத்தில் தகிக்கும் ஆசிய நாடுகள்... வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை..!!

மாலியில் மின்சார பற்றாக்குறைக்கான காரணம் என்ன?

மாலியில் ஒரு வருடத்திற்கு முன்பே மின் வெட்டு பிரச்சனைகள் ஆரம்பித்தன. மாலியின் மின் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை கடனில் மூழ்கிய நிலையில், அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. பலரிடம் பேக்-அப் ஜெனரேட்டர்கள் இல்லை. அதனை இயக்க தேவையான எரிபொருள் விலையும் மிகவும் அதிகம். மின்சாரம் இல்லை என்றால் இரவில் மின்விசிறிகள் கூட இல்லாமல் பலர் வெளியில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. வெப்பத்தால் மக்கள் தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். 

மாலியில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டியது

மார்ச் மாதத்திலிருந்து, மாலியின் சில பகுதிகளில் வெப்பநிலை 48C க்கு மேல் உயர்ந்துள்ளது, 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் வயதானவர்கள் மற்றும் மிகவும் சிறியவர்கள். பமாகோவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் யாகூபா டோலோபா கூறுகையில், "ஒரு நாளைக்கு சுமார் 15 மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். "பல நோயாளிகள் நீரிழப்பு பிரச்சனையுடன் உள்ளனர். இதற்கான முக்கிய அறிகுறிகள் இருமல் மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமா. சிலருக்கு சுவாச பிரச்சனைகளும் உள்ளன," என்று கூறினார்.

மாலியில் பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

முன்னெச்சரிக்கையாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது. செனகல், கினியா, புர்கினா பாசோ, நைஜீரியா, நைஜர் மற்றும் சாட் போன்ற அண்டை நாடுகளையும் கொடிய வெப்ப அலை தாக்குகிறது. உலக வானிலை பண்புக்கூறு (WWA) விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், காலநிலை மாற்றம் தான் வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்கின்றனர்.

மேலும் படிக்க | மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News