மாலத்தீவுக்கு சுற்றுலா வாங்க... இந்தியர்களிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்!

Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 7, 2024, 05:02 PM IST
  • இந்தியாவுடனான பதற்றம் மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.
  • இந்தியர்கள் மாலத்தீவை புறக்கணித்தனர்.
  • இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முய்சு அரசு தான் காரணம் என உள்ளூர் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மாலத்தீவுக்கு சுற்றுலா வாங்க... இந்தியர்களிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்! title=

Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு (Maldives President Mohamed Muizzu ) தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், இந்தியாவுடான உறவில் தொடர்ந்து பதற்றம் காணப்படுகிறது. இந்தியாவுடனான பதற்றம் மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது. 

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டத்தை தொடர்ந்து, கடந்த நான்கு மாதங்களில் மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இந்நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்று மாலத்தீவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை நினைகூர்ந்து, ​​எங்கள் அரசு இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றார். மாலத்தீவுக்கு வரும் இந்தியர்களை எங்கள் மக்களும் எங்களது அரசாங்கமும் அன்புடன் வரவேற்பார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில் இந்தியர்களை மாலத்தீவுக்கு (Maldives) வருகை தருமாறு நான் அழைப்பு விடுக்க விரும்புகிறேன். எங்கள் பொருளாதாரம் சுற்றுலா துறையை நம்பியே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சரின் இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு சென்று, அது தொடர்பான தனது பயண படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, மக்களை சுற்றுலா வருமாறு வேண்டுகோள் விடுத்தபோது, ​​மாலத்தீவு அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் லட்சத்தீவுகள் குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவை புறக்கணித்தனர்.

மேலும் படிக்க | மாலத்தீவு செல்ல பிளானா... சுற்றுலா பயணிகள் மீது நடக்கும் தாக்குதல்கள்... எச்சரிக்கையா இருங்க!

இந்தியர்கள் புறக்கணிப்பின் விளைவாக மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளது என சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு மிகவும் விருப்பமான இடமாக இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த பிறகு, மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 42,638 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வந்துள்ளனர் என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 73,785 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வந்திருந்தனர் என்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன

இந்திய-மாலத்தீவு பதற்றம் மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முய்சு அரசு தான் காரணம் என உள்ளூர் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இதையடுத்து இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருகிறது. முய்ஸு சீனாவின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ‘இந்தியா அவுட்’ என்ற கோஷத்தை முன்வைத்திருந்தார்.

அதிபர் முய்சு ஆட்சிக்கு வந்த பிறகு, மாலத்தீவில் இருக்கும் இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவது குறித்து பிரச்சினையை எழுப்பினார். மாலத்தீவில் 88 இந்திய வீரர்கள் இருந்தனர். இப்போது இந்த வீரர்கள் இந்தியாவிற்கு திரும்ப இருக்கிறார்கள். மாலத்தீவு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியாவின் முக்கியமான அண்டை நாடாகும். இது மட்டுமின்றி, மோடி அரசின் 'அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் கொள்கை' போன்ற முயற்சிகளிலும் மாலத்தீவுக்கு முக்கிய இடம் உண்டு.

மேலும் படிக்க | மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News