பாம்பின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பித்த... கில்லாடி தவளை..!

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 31 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் உள்ளது.

வீடியோவில் தவளை ஒன்று பெரிய இரும்பு கேட் ஒன்றின் மீது ஏறுவதைக் காணலாம். பாம்பு ஒன்று அதன் கால்களை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டு அதனை விழுங்க முயற்சி செய்வதையும் காணலாம்.  ஆனால் தவளை தனது முழு வலிமையையும் திரட்டி, பாம்பின் கிடுக்கிபிடியில் இருந்து தப்பிக்கிறது.

Trending News