குரங்கோட ஒரு கூல் மீல்: சூப்பரான வைரல் வீடியோ

Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் ஒரு வீடியோ இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் ஒரு நபரும் குரங்கும் மிகவும் பாசத்தோடு தர்பூசணி பழத்தை சாப்பிடுவதை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Trending News