ஆப்பிள் வெறியர்களுக்கு ஒரு நற்செய்தி... இன்று அறிமுகமாகும் iPad? - முழு விவரம்

Apple 11th Gen iPad: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPad அல்லது பென்சில் இன்று அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2023, 05:46 PM IST
  • 11ஆவது தலைமுறை iPad இன்று அறிமுகமாகும் என தகவல்.
  • அறிமுகப்படுத்தப்பட்டால் இதுதான் நிறுவனத்தின் மலிவு விலை iPad ஆக இருக்க வாய்ப்பு.
  • இல்லையெனில், ஆப்பிள் நிறுவனம் அதன் பென்சிலை அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் வெறியர்களுக்கு ஒரு நற்செய்தி... இன்று அறிமுகமாகும் iPad? - முழு விவரம் title=

Apple 11th Gen iPad: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPad மினி மற்றும் பிற தயாரிப்புகளை இன்று அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய டேப்லெட்டான iPad அறிமுகம் குறித்த எந்தவித விவரங்களையும் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறோம். 

ஆனால், இன்று புதிய iPad அல்லது அதன் மூன்றாம் தலைமுறை பென்சில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, ஆப்பிள் நிறுவனத்தின் 11ஆவது தலைமுறை (11th Gen) iPad மற்றும் iPad Air சாதனமும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தயாரிப்புகளுக்கு ஆப்பிள் விரும்பிகள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

iPad Mini M16

ஆப்பிளின் புதிய iPad மினி A16 பயோனிக் சிப்பைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது அதன் தற்போதைய A15 பயோனிக் சிப்பை விட நுட்பமானது என்றும் குறிப்பிடத்தக்க மேம்பாடாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய iPad மினியின் சில பயனர்களைப் பாதிக்கும் 'ஜெல்லி ஸ்க்ரோலிங்' சிக்கலைத் தீர்க்க இந்த அப்டேட் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. zeenews.india.com/tamil/technology/apple-festive-sale-2023-started-in-india-from-today-see-iphone-imac-ipod-discounts-here-468045

மேலும் படிக்க | Pixel 8 Pro vs iPhone 15 Pro Max: இதில் எதை நம்பி வாங்கலாம்...? முழு விவரம்

iPad Air

Apple iPad Air ஆனது M2 சிப்பைக் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதன் தற்போதைய M1 சிப்புடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க செயல்திறன் மற்றும் அதன் அப்டேட்டை கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் தேவைப்படும் பணிகளை எளிதாகக் கையாள இது அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஆரம்ப கட்ட iPad பதிப்புகள் கடந்த ஆண்டு மட்டுமே புதுப்பிக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை அப்டேட் செய்துகொள்ளலாம். கடந்த 10ஆவது தலைமுறை (10th Gen) iPad மெலிதான முனைகள், புதிய வண்ணக்தஶ் மற்றும் Touch ID பக்க பட்டன் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 11வது தலைமுறை (11th Gen) மாடல் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை, ஆனால் இது A16 சிப் கொண்டிருக்கும் என்ற ஊகங்கள் மட்டுமே அதிகம் உள்ளன.

பென்சில் அல்லது iPad

ஆப்பிள் நிறுவனம் இவற்றை அறிமுகப்படுத்தினால், மற்ற இரண்டு டேப்லெட்களை விட இந்த iPad மலிவு விலையில் இருக்கும் எனவும் நாம் எதிர்பார்க்கலாம். புதிய iPad அறிமுகப்படுத்தப்படவில்லை என்றால், ஆப்பிள் புதிய ஆப்பிள் பென்சிலை அறிவிக்கலாம். இந்த புதிய பென்சில் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய காந்த முனைகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப சார்ந்து வரைதல் மற்றும் டிஜிட்டல் ஓவியம் போன்ற பல்வேறு கலைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இது கொண்டு வரப்படுகிறது.

ஆப்பிள் இன்று ஒரு புதிய iPad அறிமுகப்படுத்தினால், மலிவு விலையில் iPad வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஆப்பிள் ஒரு புதிய ஆப்பிள் பென்சிலை அறிமுகப்படுத்தினால், பல்வேறு கலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பென்சில்களை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

பண்டிகை கால விற்பனை

ஆப்பிள் நேற்று முன்தினம் அதன் பண்டிகை கால விற்பனையை இந்தியாவில் தொடங்கியிருந்தது. அதில் iPhone, iMac, iPad, iPod போன்ற பல சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஹெச்டிஎஃப்சி கிரெடிட் வைத்துள்ளவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | 65 இன்ச் மெகா ஸ்மார்ட் டிவிகள்... மெகா தள்ளுபடியில் - சீக்கிரம் மக்களே முடியப்போகுது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News