ஜியோ: 23 நாட்களுக்கு இலவச அழைப்பு மற்றும் டேட்டா... மிஸ் பண்ணிடாதீங்க...!

ரிலையன்ஸ் ஜியோ மலிவான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டியை 23 நாட்கள் கூடுதலாக நீட்டித்துள்ளது. இந்த திட்டம் 365க்கு பதிலாக 388 நாட்களுக்கு இலவச அழைப்பு மற்றும் தினசரி டேட்டாவுடன் செல்லுபடியாகும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 14, 2023, 11:05 AM IST
  • ஜியோ வருடாந்திர பிளான்
  • கூடுதலாக 23 நாட்கள் வேலிடிட்டி
  • தீபாவளி சலுகை குறுகிய காலம் மட்டுமே
ஜியோ: 23 நாட்களுக்கு இலவச அழைப்பு மற்றும் டேட்டா... மிஸ் பண்ணிடாதீங்க...! title=

நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால், மலிவு விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் ஒரு சிறப்பு சலுகையுடன் வந்துள்ளது. சந்தாதாரர்கள் ஒரு ரீசார்ஜ் மூலம் முழு 388 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை பெறுவார்கள். தீபாவளியையொட்டி இந்த சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. இனி இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அழைப்பு மற்றும் டேட்டாவைகூடுதலாக 23 நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோவின் மலிவான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 2999. இதில், வாடிக்கையாளர்கள் தினசரி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்பு போன்ற பலன்களைப் பெறுகிறார்கள். வருடாந்திர திட்டமாக இருந்தாலும், இது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஆனால் 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி காரணமாக, இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 388 நாட்களாக மாறியுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் மொத்தம் 970ஜிபி டேட்டாவைப் பெறுகின்றனர்.

மேலும் படிக்க | இடி மின்னல் அடிக்கும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாமா?

குறுகிய கால தீபாவளி சலுகை

ஜியோ நிறுவனம் கூடுதல் தினசரி டேட்டா மற்றும் 23 நாட்களுக்கு அழைப்பு போன்ற சலுகைகளை வரையறுக்கப்பட்ட கால சலுகையுடன் வழங்குகிறது. அதாவது இந்த சலுகை எப்போது வேண்டுமானாலும் முடிவடையும். இதில் தினசரி செலவு ரூ.8க்கும் குறைவாக உள்ளது, தினசரி டேட்டா மட்டுமின்றி அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

வருடாந்திர திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்

சந்தாதாரர்கள் கூடுதல் செல்லுபடியாகும் நன்மையைப் பெறும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.2,999 ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், தினசரி 2.5 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள். இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் செய்ய முடியும். இந்தத் திட்டம் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் விருப்பத்தையும் வழங்குகிறது, அதனுடன் அவர்கள் ஜியோ ஆப்ஸ் (ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட்) சப்ஸ்கிரிப்சனைப் பெறுகிறார்கள்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா

ஜியோவின் 5ஜி சேவைகளின் பலன்களைப் பெற ஆரம்பித்து, 5ஜி ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினால், தினசரி டேட்டாவின் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், பயனர்களுக்கு வரம்பற்ற True 5G டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது. 239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் ஜியோவின் எந்த திட்டத்திலிருந்தும் ரீசார்ஜ் செய்வதன் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவை அனுபவிக்க முடியும்.

மேலும் படிக்க | BSNL அலற வைக்கும் பிளான்... 4 OTT இலவசம், 1 TB டே்டடா வெறும் 799 ரூபாய் மட்டுமே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News