125 ரூபாயில் நச் திட்டம்... இனி தினமும் உங்களுக்கு டேட்டா காலியாகாது - முழு விவரம்!

Vodafone Idea Data Recharge Plan: வோடபோன் நிறுவனம் ஐபிஎல் ரசிகர்களை கவரும் வகையில் புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2024, 06:35 PM IST
  • 19 ரூபாய் மற்றும் 49 ரூபாயில் சமீபத்தில் சில திட்டங்களை அந்நிறுவனம் கொண்டுவந்தது.
  • அனைத்து நிறுவனங்களும் டேட்டா திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்துகின்றன.
  • ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
125 ரூபாயில் நச் திட்டம்... இனி தினமும் உங்களுக்கு டேட்டா காலியாகாது - முழு விவரம்! title=

Vodafone Idea Rs 125 Data Recharge Plan: இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களாக ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளது. இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் போட்டிப்போட்டுக் கொண்டு பல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகின்றன. மேலும், தள்ளுபடிகள், ஆஃப்பர்கள், ஓடிடி பலன்கள், கூடுதல் டேட்டா பலன்கள் ஆகியவற்றையும் இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.

அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் ஐபிஎல் சீசன் நடைபெறுவதால் ஐபிஎல் ரசிகர்களை தங்கள் வசம் கொண்டுவர அனைத்து நிறுவனங்கள் பல டேட்டா திட்டங்களை வழங்கி வருகின்றன. ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகளை நீங்கள் இலவசமாகவே காணலாம். மொபைல் மட்டுமின்றி லேப்டாப், டேப்லட், ஸ்மார்ட் டிவி என பல சாதனங்ளில் நீங்கள் காணலாம். தொலைக்காட்சியில் நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் பல மொழிகளில் காணலாம். 

ஐபிஎல் ரசிகர்களுக்கான டேட்டா திட்டம்

ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நீங்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்க இலவச அணுகல் இருந்தாலும், அதனை பார்க்க உங்களிடம் நிச்சயம் டேட்டா இருந்தாக வேண்டும். வீட்டில் அன்லிமிடெட் டேட்டாவுடன் வைஃபை வசதி இருந்தால் இதில் எவ்வித பிரச்னையும் இருக்கப் போவதில்லை.  மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பயனராக நீங்கள் இருந்தாலும் பெரிய பிரச்னை இருக்கப்போவதில்லை. மொபைல் டேட்டாவை மட்டும் நம்பி ஐபிஎல் போட்டிகளை நீங்கள் நிம்மதியாக பார்க்க முடியாது என்பதாலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு டேட்டா திட்டங்களை வழங்கி வருகின்றன.

மேலும் படிக்க | ஜியோவின் செக்மேட் பிளான்! பிஎஸ்என்எல், வோடஃபோன் ஐடியா எகிறிய பிபி

வோடபோன் ஐடியாவின் புதிய திட்டம்

ஜியோ, ஏர்டெல் மட்டுமின்றி வோடபோன் ஐடியா நிறுவனமும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் தொடர்ந்து பிரீபெய்ட் டேட்டா பிளான்களை அறிவித்து வருகிறது. ஐபிஎல் சீசன் தொடங்கியிருக்கும் இந்த சீசனில் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்க வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இன்னும் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறவில்லை என்றாலும் பரவலான அனைத்து நகரங்களிலும் 4ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

125 ரூபாய் டேட்டா திட்டம்

இந்நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் 125 ரூபாயில் டேட்டா பலன்களை வழங்கும் பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் என்னென்ன பலன்களை பெறுவார்கள் என்பதை இதில் காணலாம். இந்த 125 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் என்பது டேட்டா திட்டமாகும். இதில் காலிங், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் கிடைக்காது. எனவே, இதனை பெற நீங்கள் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். 

பலன்கள் என்னென்ன?

125 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாளாகும். இந்த 28 நாளில் தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தம் 28ஜிபி உங்களுக்கு கிடைக்கும். ஐபிஎல் ரசிகர்களுக்கு இது நல்ல ரீசார்ஜ் திட்டமாகும். இதேபோல் வோடபோன் ஐடியாவின் 19 ரூபாய் மற்றும் 49 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் திட்டமும் சமீபத்தில் அறிமுகமானது. 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 20ஜிபி டேட்டாவும், 19 ரூபாய் திட்டத்தில் 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும். ஆனால், இந்த திட்டங்களின் வேலிடிட்டி ஒரு நாள்தான். அதாவது, நீங்கள் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் அதே நாளின் இரவு 11.59 மணிக்கு அந்த திட்டம் காலாவதியாகிவிடும். 

மேலும் படிக்க | மிக மிக மலிவு விலையில் நல்ல ரீசார்ஜ் திட்டம்... ஐபிஎல் வெறியர்களே பயன்படுத்திக்கோங்க!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News