ஓசி பஸ் என்கிறார்கள்... இலவச பயணத்தை புறக்கணியுங்கள் - பிரேமலதா வேண்டுகோள்

அமைச்சர் ஓசி பஸ் என்கிறார் அதனால் இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 2, 2022, 09:11 PM IST
  • ஓசி பஸ்லதானே போறீங்க என அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார்
  • அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது
  • பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க பிரேமலதா வேண்டுகோள்
 ஓசி பஸ் என்கிறார்கள்... இலவச பயணத்தை புறக்கணியுங்கள் - பிரேமலதா வேண்டுகோள் title=

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியளர்களைச் சந்தித்த அவர், ”ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை, வசதியானவர்கள்தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என அமைச்சர் கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் செல்ல முடியாத அளவிற்கு அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ஆர்.எஸ்.எஸ்-ஐ தனி மனிதனால் அழிக்க முடியாது - மத்திய இணையமைச்சர் சூளுரை

அரசுப் பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படி பயணிக்கும்போது அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துக்கே அதிகம் செலவழித்தால் ஊரில் போய் எப்படி பண்டிகை கொண்டாட முடியும்?

எல்லாமே இங்கு வியாபாரம்தான் என்றால், அரசாங்கமும் வியாபார ரீதியாக நடக்கிறதா? மக்களுக்கான அரசு இது இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மகளிருக்கான இலவசப் பயணம் குறித்த அமைச்சர் பொன்முடியின் கருத்தை கண்டிக்கிறேன். அதிமுக சார்பில் முதிய பெண்மணியை தூண்டி இலவச பயணத்துக்கு எதிராக பேசி வீடியோ பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மேலும் படிக்க | RSS உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது: தமிழ்நாடு அரசு

முன்னதாக, அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பேசுகையில், “ஓசி பஸ்லதானே போறீங்க” என பேசியது தமிழ்நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் என கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அந்த  மூதாட்டிக்கு பணம் கொடுத்து அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார் என பேச்சு எழுந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News