திடீரென அனைத்து பதவியையும் ராஜினாமா செய்த தமிழிசை..! காரணம் இதுதான்

Tamilisai Sundararajan Resigned: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சுந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளதால், மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் எனத்தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 18, 2024, 01:08 PM IST
திடீரென அனைத்து பதவியையும் ராஜினாமா செய்த தமிழிசை..! காரணம் இதுதான் title=

Lok Sabha Election 2024: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீண்டும் தேர்தல் அரசியலில் பிரவேசிப்பதற்காக அவர் தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

2019 வரை தமிழக பாஜக தலைவராக தமிழிசை சுந்தரராஜன் இருந்தார். செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு அவர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பிப்ரவரி 2021 அன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. 

ஆளுநராக நியமிப்பதற்கு முன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழக பாஜகவில் முக்கியப் பதவிகளில் அவர் இருந்தார்.

பாஜகவின் 3வது பட்டியலில் தமிழிசை சுந்தரராஜன் பெயர் இடம்பெறலாம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சுந்தரராஜன். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அவர் தமிழகத்தில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் கொடுத்துள்ளார். பா.ஜ., அறிவிக்கும் மூன்றாவது வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க - பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்

மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வருகிறார் தமிழிசை சுந்தரராஜன்?

இன்று (திங்கட்கிழமை) காலை ஜனாதிபதிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதம் மாலைக்குள் ஏற்றுக்கொள்ளப் படும் எனத் தெரிகிறது. ஆளுநரான பிறகு தமிழிசை சுந்தரராஜன் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வருகிறார்.

2019ல் தோல்வியை சந்தித்த தமிழிசை சுந்தரராஜன்

செல்வாக்கு மிக்க நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழிசை சுந்தரராஜன், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து நிறுத்தப்பட்டார். ஆனால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. அந்தத் தேர்தலில் கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்றார். தமிழிசை சுந்தரராஜன் வெறும் 2,15,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - ஒரே நாடு, ஒரே தேர்தல்: '400 இடங்கள் இலக்கு' என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுக்க காரணம் என்ன?

தமிழிசை சுந்தரராஜன் வகித்த பதவிகள்

1999-ல் தென் சென்னை மாவட்ட மருத்துவப் பிரிவு செயலாளராகவும், 2001-ல் மாநில பொதுச் செயலாளராகவும், 2005-ல் அகில இந்திய இணை ஒருங்கிணைப்பாளராகவும் (தென் மாநிலங்களுக்கான மருத்துவப் பிரிவு), 2007-ல் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பாஜகவின் மாநிலப் பிரிவில் பணியாற்றியுள்ளார். 2010-ல் துணைத் தலைவர். 2013-ல் தேசியச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கபட்டு உள்ளன. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. முதலாவதாக 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. அதன்பிறகு மார்ச் 13 அன்று 72 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அடுத்து ஓரிரு நாட்க்களில் மூன்றாவது பட்டியலை பாஜக வெளியிடவுள்ளது.

மேலும் படிக்க - பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News