சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள் என கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2024, 06:32 AM IST
  • இதை வாக்குக்காக நான் பேசவில்லை.
  • ஒவ்வொரு முறையும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
  • அந்த கோபம் தான் இங்கு நிற்கிறேன்.
சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்! title=

இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர்பச்சான் அறிவித்ததை தொடர்ந்து, கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தங்கர் பச்சான், நான் எனது ஏழு வயதில் பார்த்த கடலூர் இன்று வரை மாறவில்லை, நாங்கள் என்ன பாவம் செய்தோம் இந்தியா முழுக்க தேர்தல் நடக்கிறது. கடலூரிலும் தேர்தல் நடக்கிறது, கடலூரில் இருந்து இதுவரை 20 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதை வாக்குக்காக நான் பேசவில்லை. ஒவ்வொரு முறையும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அந்த கோபம் தான் இங்கு நிற்கிறேன். நான் வாக்கு கேட்டால்தான் கிடைக்கும் போல இருக்கிறது, வாக்கு கேட்டாலும் எளிதில் வராது இது எனக்கு பிடித்ததாக இல்லை.

மேலும் படிக்க | 'பைத்தியம் இல்லை, உங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்துள்ளேன்' - திமுகவுக்கு தமிழிசை பதிலடி!

கடலூரில் அதே பேருந்து நிலையம் தான் உள்ளது, ஆனால் நகை கடை பெரிதாக மாறி உள்ளது, துணிக்கடை பெரிதாக மாறி உள்ளது. உலகத்தில் கடினமான தொழில் மீன் பிடி தொழில், அவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது. உலக நாடுகளில் உழைக்கும் மக்கள் எப்படி வாழ்கின்றனர், அவர்களுக்கு கல்வி மருத்துவம் எப்படி உள்ளது. அங்கு உழைப்பவர்களான மீனவர்கள் விவசாயிகள் மதிக்கப்படுகின்றனர், உழைப்பவனை ஆளுபவன் மதித்தால் தான் மக்கள் மதிப்பார்கள். வகை வகையாக உணவு தரும் விவசாயிகள் என்ன உண்ணுகின்றார் என தெரியுமா? விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு கொடுக்கின்றனர் உணவு தந்த விவசாயி அரிசிக்காக வரிசையில் நிற்கின்றான். கடலூரில் எப்போது புயல் வரும் என அரசியல்வாதிகள் எதிர்பார்க்கின்றனர். அப்படி புயல் வந்தால் வாழை விவசாயி பாதிக்கப்படுவான், அவர்கள் ஒரு 5000 கிடைக்குமா என காத்துக் கொண்டிருப்பான். 

தேர்தல் என்பது ஒரு வருமானம் தரும் தொழிலாக மாறி உள்ளது, ஒவ்வொரு தேர்தலில் என்ன என்ன வேஷம் போடுகின்றனர். நான் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்வேன், ஒரு கலப்பையை கொடுத்தால் நாளை விவசாயம் செய்வேன். நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிப்பேன். அரசியல் என்பது பணத்தை செலவு செய்து மீண்டும் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர். நெய்வேலியில் மனித குடலை பிடுங்கி எறிவது போன்று எரிந்து விட்டனர். 44 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் போனது அங்கு இருந்தவர்கள் அனைவரும் அகதிகளாக மாறி உள்ளனர். மேலும் 24 ஆயிரம் ஏக்கர் என்எல்சிக்கு வேண்டும் என்கின்றனர். இதற்காக முதலில் போராட்டம் நடத்தியது பாமக அந்த காரணத்தினால் தான் இங்கு நிற்கிறேன்.

தங்கர் பச்சான் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை ஏற்க மறுப்பு என்ற பொய் செய்தி போடுகின்றனர். நம் பிள்ளைகளை வைத்து பொய் செய்தி போட வைக்கின்றனர். எங்க தாத்தா இந்த கட்சிக்குதான் ஓட்டு போட்டாரு எங்க அப்பா இந்த கட்சிக்குதான் ஓட்டு போட்டாரு நானும் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன் என்பது சரியா? எங்களின் வாழ்க்கை போய்விட்டது நீங்கள் கோடி கோடியாய் குவித்து வைத்துள்ளீர்கள். இங்கு ஓட்டு வாங்கி வெற்றி பெற்றால் இதனை சரி செய்ய யார் யார் காலில் விழ வேண்டும் என எனக்கு தெரியும் நான் விழுவேன். அம்பேத்கர் இல்லையென்றால் ஏதும் இல்லை அவரை சாதி தலைவராக வைத்துள்ளனர். லெனின், பெரியார், அண்ணா அவர்களின் படத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து நோய்களும் இங்கு உள்ளது. கடலூர் சிப்காட் பகுதியில் உலக சுகாதார நிறுவனம் தடை செய்த அத்தனை நிறுவனமும் உள்ளது.

எப்போது சிந்திக்கப் போகிறீர்கள் நீங்கள் ஓட்டு போடுவீங்களோ இல்லையோ நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு நல்லது இதுபோன்று யாராவது சொல்வார்களா? ஓட்டு போட்டவர்கள் பரதேசியாக நிற்கின்றனர் ஓட்டு வாங்கியவர்கள் எப்படி போகின்றார் என பாருங்கள். ஒவ்வொரு சின்னத்தின் பின் எவ்வளவு திருடன் ஒளிந்து இருக்கின்றான். பாமக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன் இது சரியான கூட்டணி நிச்சயம் சாதிக்க முடியும். இங்கு வேலையில்லாத பிள்ளைகளை இல்லாமல் ஆக்க வேண்டும் முந்திரி தொழிலை மாற்ற வேண்டும். 39 தொகுதிகளில் 38 தொகுதிகள் ஏதாவது பண்ணுங்க இந்த ஒரு தொகுதியை எனக்காக செய்யுங்கள். அப்படி செய்தால் முந்திரியை சரி செய்து கொள்கிறேன், வாழையை சரி செய்து கொள்கிறேன் என்றார். இலவசத்தை மக்கள் என்றைக்கு வாங்க மறுக்கின்றனாரோ அப்போதுதான் மக்கள் வாழ்க்கை உயரும் சின்னத்தை பார்த்து வாக்களிக்காமல் தகுதி பார்த்து வாக்களியுங்கள் சின்னம் பார்த்து வாக்களித்தால் அது செல்லாத ஓட்டு என பேசினார்.

மேலும் படிக்க | மதிமுக சிட்டிங் எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி...? அரசியல் களத்தில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News