திமுகவில் இணைந்த தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அதிமுக, மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.  

Written by - RK Spark | Last Updated : Mar 20, 2024, 08:33 AM IST
  • திமுகவில் இணைந்த விஜய் ரசிகர்கள்.
  • அதிமுக நிர்வாகிகளும் இணைந்து கொண்டனர்.
  • அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள்!  title=

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற ஆலோசகர் முத்துராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில்  நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதுபோல் 59 வது வார்டு பகுதியில் உள்ள அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, அமுமுக உள்ளே கட்சிகளை சேர்ந்த பெண்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களையும் அமைச்சர் கீதா ஜீவன் ஷால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதுபோல் மாற்றுத்திறனாளி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

thoothukudi

மேலும் படிக்க | திருச்சியில் திமுகவின் மெகா தேர்தல் கூட்டம், துரை வைகோ இருப்பார், அமைச்சர் நேரு மகன் இருப்பாரா?

வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டு, வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 30ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு எல்லை கோடுகள் வரையும் பணி இன்று துவங்கியது. 

கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் 100 மீட்டர் 200 மீட்டர் இடைவெளிக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நஞ்சப்பா ரோடு செல்லும் சாலையிலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையிலும், அவிநாசி சாலை செல்லும் வழியிலும் 100 மீட்டர் 200 மீட்டர் இடைவெளிக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் இந்த குறிப்பிட்ட எல்லை வரை தொண்டர்களுடன் வரலாம் எல்லைக்கோடுகளை கடந்து வரும் பொழுது வேட்பாளர் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு பேரணி

சென்னை இசிஆர் சாலை மற்றும் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி நீலாங்கரை சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஆனந்தபாபு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரதீப் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் நீலாங்கரை போலீசார் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இ சி ஆர் சாலையில் துவங்கிய இந்த கொடி அணிவகுப்பு பேரணி ஈஞ்சம்பாக்கம் பெத்தல் நகர் பகுதி முழுவதும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று ஈஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே முடிந்தது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எந்த ஒரு அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை! லைகா வழக்கில் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News