யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!

அடிதடி வழக்குகளில் தொடர்புடைய கும்பலில் யார் தலைவன் என்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 3, 2022, 03:09 PM IST
  • கேங்க் லீடர் யார் என்பதில் கூட்டாளிகளுக்குள் தகராறு
  • பாரில் வைத்து ஏற்பட்ட மோதல் - பயங்கரம்
  • கொலையாளிகள் போலீசில் கொடுத்த வாக்குமூலம்?
யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்! title=

திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் 29 வயதான சுரேஷ். இவர் தனது நண்பர்கள் மோகன்ராஜ்,மணிகண்டன், உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து திருப்பூரில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் மீது திருப்பூர் காவல்நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Tiruppur murder,Tirupur murder,திருப்பூர் கொலை, திருப்பூர்,கள்ளக்காதலன்,இரண்டு கள்ளக்காதலன்,2 குழந்தைகளுடன் கொல்லப்பட்ட இளம்பெண், கோகுல்,கோபால்,கார்த்திக்

இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5பேரும் சேர்ந்து சந்திராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் மது பாரில் மது அருந்தினர். அப்போது சுரேஷ் அவரது நண்பர்களிடம், ‘நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் ; பணம் என்னிடம் இருந்துதான் உங்கள் கைக்கு வருகிறது; எனவே எனக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும்’என்று ஆடர் போட்டிருக்கிறார்.

Tiruppur murder,Tirupur murder,திருப்பூர் கொலை, திருப்பூர்,திருப்பூர் சுரேஷ் கொலை, சுரேஷ் கொலை, சுரேஷ் மர்டர், suresh murder,Tiruppur suresh murder,suresh kolai

இதற்கு அவரது நண்பர்கள் 5பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதையடுத்து பாரில் இருந்து அனைவரும் வெளியேறினர். அதன் பிறகும் அவர்களுக்குள் தகராறு ஓயவில்லை. ஒரு கட்டத்தில் எல்லைமீறிப் போக, ஆத்திரமடைந்த 5பேரும் சேர்ந்து பட்டா கத்தியால் சுரேஷை சரமாரி வெட்டினர். இதில் சுரேஷின் தலையில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலை வெறியிலிருந்த 5பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.

Tiruppur murder,Tirupur murder,திருப்பூர் கொலை, திருப்பூர்,திருப்பூர் சுரேஷ் கொலை, சுரேஷ் கொலை, சுரேஷ் மர்டர், suresh murder,Tiruppur suresh murder,suresh kolai

இதனையடுத்து, சுரேஷ் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மோகன்ராஜ், மணிகண்டன், குணா, உள்ளிட்ட 5பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | 12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது

விசாரணையில் முடிவில்தான் சுரேஷின் கொலைக்கான முழுக்காரணமும் வெளிவரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் தலைவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றுமாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News