முதல்வன் பட பாணியில் மாஸ் காட்டிய கலெக்டர்! அதிகாரிகள் நிரந்தர நீக்கம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் சிறப்பு முகாமில் பணியில் இல்லாத 10 பேர் பணியிட நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.  

Written by - RK Spark | Last Updated : Nov 27, 2022, 08:59 AM IST
  • பணியில் இல்லாத அதிகாரிகள் நீக்கம்.
  • வாக்காளர் அட்டை சரிபார்ப்பு பணியின் போது நடவடிக்கை.
  • மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
முதல்வன் பட பாணியில் மாஸ் காட்டிய கலெக்டர்! அதிகாரிகள் நிரந்தர நீக்கம்! title=

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்வதல், புகைப்படம் மாற்றி அமைப்பது, உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்மகாமில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று திடீரென வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க | போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

அப்போது பணியில் இல்லாத 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதில் சத்துணவு அமைப்பாளர், கிராம உதவி உதவியாளர், சத்துணவு பணியாளர் என உட்பட 10 பேர் தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்தும், மேலும் இதில் ஆரோக்கிய தாஸ், சேவியர் புஷ்பராஜ் ஆகிய இரண்டு சத்துணவு அமைப்பாளர், மற்றும் அங்கன்வாடி பணியாளர் தீபா ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதே நேரத்தில் இத்தகைய சிறப்பு முகாமில் பணியில் இல்லாமல் இருக்கக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் - திமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News