தஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

நாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2024, 04:34 PM IST
  • நாளை தமிழக கோவில்களில் குருப்பெயர்ச்சி வழிபாடு
  • தஞ்சாவூர் திட்டை வஷிஷ்டேஷ்வரர் கோயிலில் சிறப்பு ஏற்பாடு
  • பேருந்து வசிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது
தஞ்சாவூர் : நாளை குரு பெயர்ச்சி.. திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு title=

குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்புமிக்க குருபகவான் நாளை (01) ம் தேதி மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவில் குருபரிகார ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் தெற்கு திசை நோக்கி ராஜகுரு வாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

மேலும் படிக்க | Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!

பக்தர்கள் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நான்கு சக்கர வாகனங்கள். இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தனி தனி வழிகள் செய்யப்பட்டுள்ளன. நாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று முதல் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய பரிகார ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்து செல்கின்றனர்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்

தஞ்சாவூர் அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். மூலஸ்தான விமானத்தில் சந்திரகாந்தக்கால் வைத்து கட்டப்பட்டுள்ளது.

அக்கல் சந்திரனில் இருந்து வரும் கதிர்களால் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தன்னுள் உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் மூலவர் வசிஷ்டேஸ்வரர் மீது விழும். இத்தகையை சிறப்பு பெற்ற கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு சாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 

மேலும் படிக்க | பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News