வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!

வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில்  வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 23, 2024, 01:40 PM IST
வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால்  தவிக்கும் பொதுமக்கள்..! title=

வேலூர் என்று சொன்னாலே பல்வேறு வரலாற்று சிறப்பம்சம் கொண்ட ஒரு நகரம் ஆகும் சிப்பாய் கலகம் முதல் தேசிய கொடி உருவாகிய இடம் அகழியுடன் உள்ள கோட்டை என அடுக்கி கொண்டே போகலாம். இப்படி பல்வேறு வராலாறு சிறப்புகள் கொண்ட மாவட்டம் தான் வேலூர் மாவட்டம் வராலாறு சிறப்பு மட்டும் அல்ல வெயிலுக்கும் பெயர் போன ஊர் தான் வேலூர் அதனை தான் வெயிலூர் என்று மற்றொரு பெயர் இட்டு அழைப்பார்கள் 

பொதுவாகவே வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில்  வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வேலூரில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் தாக்கம் துவங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கக்கூடிய மாநகரமான வேலூரில் இந்த ஆண்டின் பருவ மழை பொழித்து போனதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகின்றது.

வேலூரில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி முதல்107 டிகிரி என தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகின்றது இதன் காரணமாக காலை 12 மணி முதல் மாலை வரை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சூடிய காணப்படுகின்றன. இதனால்  கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கட்டிடம் பெயிண்டார் போன்ற வெயிலில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் பொதுமக்கள்  என அனைவரும் பெரும் சிரமத்துக்ள்ளாகின்றனர்.  

அக்னி நட்சத்திர கால வெயிலை விட அனல் காற்று தற்போது வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தர்பூசணி, இளநீர், பப்பாளி, வெள்ளேரி, ஜூஸ், கரும்புச் சாறு, பனங்காய் நுங்கு, கீரக்காய், பழ வகைகள் போன்ற நீர் ஆகாரங்கள் உள்ள பழ வகைகளை அருந்தி வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

மேலும் படிக்க | சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..

கடந்த ஆண்டுகளில் பொதுமக்களின் வெப்பத்தை தாக்கத்தை தணிக்க கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைத்தனர் ஆனால் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதுவும் அமைக்க முடியாமல் உள்ளது. இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிறுத்தங்கள் முக்கிய சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வெப்ப தாக்கத்தை தணிக்க தண்ணீர் டங்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் அறிவிப்பின்றி மின்சாரம் அடிக்கடி தடை செய்கின்றனர் இதனால் பொதுமக்கள் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடப்பதால் கேரம்போர்டு, தாயம், போன்றவற்றை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். வேலூர் மட்டுமல்ல ஈரோட்டிலும் வெப்பம் மிக அதிக அளவாக உள்ளது. நேற்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் பதிவாகியுள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 °F வெப்பம் பதிவாகி மக்களை வதைத்து வருகிறது. 

மேலும் படிக்க | அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News