கொடைக்கானலில் கால்ப் விளையாடும் முக ஸ்டாலின்! வைரல் வீடியோ!

கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்ப் கிளப்பில் உள்ள மைதானத்தில் கால்ப் விளையாடும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 1, 2024, 07:33 AM IST
  • ஓய்விற்கு சென்றுள்ள முக ஸ்டாலின்.
  • குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
  • பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கால்ப் விளையாடும் முக ஸ்டாலின்! வைரல் வீடியோ! title=

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் குளிர் பிரதேசங்களுக்கு சென்று ஓய்வெடுத்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்விற்காக 5 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரை வந்தடைந்து, அங்கு இருந்து வத்தலக்குண்டு மலைச்சாலையில் வாகனம் மூலம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு நேற்று வந்தடைந்தார். 

மேலும் படிக்க | பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில் நேற்று மாலை வேளையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கால்ப் மைதானத்திற்கு சென்று அங்குள்ள பசுமை புல்வெளி பகுதிகளில் நடந்து சென்றதுடன் கால்ப் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்று மாலை வேளையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பூம்பாறை மலைக்கிராமத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர்கள் மனைவி துர்க்கா ஸ்டாலின் அங்குள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். 

மேலும் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அவருக்கு உற்சாக வர வேற்ப்பு அளித்தனர்.  தொடர்ந்து கோவிலையும் சுற்றி பார்த்து கோவிலின் சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டார். கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர், இதனையடுத்து தங்கும் விடுதிக்கு துர்க்கா ஸ்டாலின் திரும்பியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த  25ஆம் தேதி வருகை புரிந்து பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்தார். அவரும் இதே ஸ்ரீ குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News