தென்மேற்கு பருவமழை: தமிழகம், புதுச்சேரியில் 94 சதவீதம் அதிகம்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2022, 03:31 PM IST
  • தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்தது
  • 94 சதவீதம் அதிகமாக மழை பதிவு
  • கேரளவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது
தென்மேற்கு பருவமழை: தமிழகம், புதுச்சேரியில் 94 சதவீதம் அதிகம் title=

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேரளவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும் தமிழகத்தின் வளிமண்டல் பகுதியில் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகர கூடும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 cm மழை பதிவாகியுள்ளது என்ற அவர், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றார். மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் ஓரிய இடங்களில் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | அமீரக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Chennai Metrorological

மேலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் ஓரிடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்குக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவே மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தென்மேற்கு பருவமழை பொறுத்தவரையில் கடந்த ஜூன் 1 முதல் இன்று வரை உள்ள காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு 242 மில்லி மீட்டர் இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 125 மில்லி மீட்டர் இது இயல்பான மழையின் அளவைவிட 94 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளதாக கூறினார். 

மேலும், சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவி நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்த நிலையில் நாளை முதல் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது என்றார்.

மேலும் படிக்க | Bank Holidays In August 2022: வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News