என்ன கொடும சார் இது? 2012-ல் இறந்தவருக்கு 2019-ல் கடன் கொடுத்த கூட்டுறவு வங்கி

வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கி தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 07:22 AM IST
  • வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடனில் முறைகேடு.
  • இறந்தவர் கடன் வாங்கியதாக ஆவணங்களில் குறிப்பு.
  • கடனை திரும்ப செலுத்தும்படி இறந்தவருக்கு கடிதம்.
என்ன கொடும சார் இது? 2012-ல் இறந்தவருக்கு 2019-ல் கடன் கொடுத்த கூட்டுறவு வங்கி title=

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு விவசாயி ஒருவருக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

வேட்டுவப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு வயது 58. சங்க உறுப்பினரான இவர் 2012 ஜனவரி 19ல் இறந்துவிட்டார். 

இந்நிலையில் இவர், 2019ல் கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் (Bank Loan) வாங்கியதாகவும் அதை கட்ட அறிவுறுத்தியும் கூட்டுறவு சார் பதிவாளர் கடந்த டிசம்பர் 2 ஆம் தெதி இவருக்கு சம்மன் அனுப்பி உள்ளார். 

ALSO READ | தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! 

இதனைத் தொடர்ந்து ராமசாமியின் மகன் சித்துராஜ் கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆஜராகி தந்தை இறந்ததைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

ராமசாமியின் மகன் சித்துராஜ் 

இதனால் 2016, 2021ல் தள்ளுபடி செய்த விவசாய கடன்கள் பற்றிய விவரங்களை முழுமையாக விசாரித்து முறைகேடான கடன்களை வசூலிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ராமசாமியைப் போல, பல பேரின்  பெயரில் போலியாக கடன் வழங்கப்பட்டுள்ளதாவும், இவர்களது பெயரில் வழங்கபட்ட கடன் சில நபர்களால் பெறப்பட்டு அவர்கள் தவறான முறையில் ஆதாயம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது

 இதனால் வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கி (Cooperative Bank) தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ | கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 7 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News