கணக்குகளை சரிபார்த்தலுக்கும், கோயில் நிர்வாகத்தில் தலையிடுவதிலும் வித்தியாசமுண்டு - ப.சிதம்பரம்

P Chidambaram Press Meet : உள்நாட்டு நிர்வாகத்தில் மத்திய அரசுக்கு தோல்வி ; வட்டி அதிகரிப்பால் விலை உயரும் அபாயம் - ப.சிதம்பரம் பேட்டி   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 11, 2022, 05:16 PM IST
  • ‘கணக்கு கேட்பது வேறு ; கோயில் நிர்வாகத்தில் தலையிடுவது வேறு’
  • ‘ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்திருப்பதால் மேலும் விலை உயரும்’
  • காரைக்காலில் காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி
கணக்குகளை சரிபார்த்தலுக்கும், கோயில் நிர்வாகத்தில் தலையிடுவதிலும் வித்தியாசமுண்டு - ப.சிதம்பரம்  title=

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கருத்துக்களின் சாரத்தை மட்டும் பார்க்கலாம்.

1. தமிழகம் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகியிருப்பது தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

2. குடியரசு தலைவர் தேர்வில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் விருப்பம். எதிர்கட்சியில் சிலர் மதில் மேல் பூனை போல உள்ளனர். அவர்கள் இணைந்தால் பொது வேட்பாளர் வெற்றி பெறலாம்.  தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக  செயல்பட்டால்  இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் எந்த நாட்டிற்கும் ஏற்படும். 

மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

3. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு இல்லை. கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்றால், நான் பதவி விலகத் தயார்.

4. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிகளை பெறுவது என்பது காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்ல. பா.ஜ.க.விலும் உள்ளது . எனவே அந்த நிலை மாற வேண்டும் ; மாறும். 2024 முதல் அதை மாற்றுவதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டும்  என்பதே எனது விருப்பம்  

5. ஆதினங்கள் அரசியிலில் தலையிட கூடாது. அரசும் ஆன்மீக விசயங்களில் தலையிட கூடாது. சட்டத்தில் கணக்கு கேட்க அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. கணக்குகளை சரி பார்பது என்பது வேறு. கோயில் நிர்வாகத்தில் தலையிடுவது என்பது வேறு. கோயில் நிர்வாகத்தில் தலையிடாமல் கணக்குகளை சரிபார்பதற்கு வழி இருக்கிறது. அதற்கு, அறநிலையத்துறையும்  சிதம்பர நடராஜர் கோயில் தீட்சதர்களும் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். 

6. தமிழக அரசு ஓராண்டில் இதுவரை தப்பாக எந்தடியும் எடுத்து வைக்கவில்லை. முதல்வர் ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுக்கிறார். 

7. உள்நாட்டு நிர்வாகத்தில் மத்திய அரசு முற்றிலும் தோற்று விட்டது. பெட்ரோல், டீசல் விலையை முன்பே குறைத்திருக்க வேண்டும்.  பண வீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது இன்னும் கூடும். உணவு பொருட்கள் மீதான பண வீக்கம் 10 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்திருப்பது மேலும் விலை உயர்வு ஏற்படும். இந்நிலையில் அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டு விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டுமே தாமதமான முடிவுகளை அறிவிக்கிறது. 

மேலும் படிக்க | இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரலாம்!..ப.சிதம்பரம் எச்சரிக்கை

8. எ.ஐ.சி., பங்கு விற்பனை என்பது ஒரு சோதனை முயற்சி. குளறுபடி முடிவால் எந்த நேரத்தில் விற்பது என்று தெரியாமல் விற்பனை செய்ததால் விற்ற விலையை விட குறைந்துள்ளது. 

9. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்தளிக்கும் நிதிகளுக்கான வரிகளை குறைப்பதால், மாநிலங்களுக்குத்தான் இழப்பு ஏற்படும். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காத நிதி வரவினங்களுக்கான வரியை மத்திய அரசு குறைப்பது இல்லை.  

10. ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும். மசோதாவை கிடப்பில் போடக்கூடாது. 

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News