காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: காவலர்களிடம் கடுமையான வாக்குவாதம்

Anti-Valentine's Day: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பாரதி பூங்காவிற்குள் காதலர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காதலர்கள் ஜோடி ஜோடியாக வெளியில் காத்திருந்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 14, 2022, 03:28 PM IST
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: காவலர்களிடம் கடுமையான வாக்குவாதம் title=

புதுச்சேரி: பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாரதி பூங்காவிற்குள் காதலர்களை அனுமதிக்கவில்லை, இதனை கண்டித்து ஒன்றுதிரண்ட சமூக அமைப்பினர் வெளியில் காத்துக் கொண்டிருந்த காதலர்களுடன் கேட்டை திறந்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களை விட புதுச்சேரியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை ஒட்டி வெளி மாவட்டம் மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான காதலர்கள் புதுச்சேரிக்கு படையெடுப்பார்கள்.

அப்போது அவர்கள் கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் அமர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள் காதலர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

மேலும் படிக்க: காதலர் தினம் 2022: இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான மனைவிகள், அட்டகாசமான காதலிகள்

ஆனால் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பாரதி பூங்காவிற்குள் காதலர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காதலர்கள் ஜோடி ஜோடியாக வெளியில் காத்திருந்தனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக அமைப்பினர் பாரதி பூங்காவில் இருந்த காவலர்களிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும் வெளியில் காத்திருந்த காதலர்களை அழைத்து கேட்டைத் திறந்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடற்கரைக்கு சென்ற அவர்கள் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க: இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் மிகவும் ஆரவாரமாக இருக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News